திறந்தவெளியில் மலம் கழித்தால்.. திருநங்கைகள் விசில் அடிப்பாங்க... ம.பி.யில் அதிரடி!
போபால்: திறந்த வெளியில் அசுத்தம் செய்வோரைத் தடுக்க திருநங்கைகளின் உதவியோடு மத்திய பிரதேச அரசு வித்தியாசமான முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது.
மலம் கழிக்க கழிப்பறைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதற்கென பல்வேறு விழிப்புணர்வு விளம்பரங்களும் ஒளிபரப்பப் பட்டு வருகின்றன. ஆனாலும், பல கிராமங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத காலி இடங்களைத் தான் மக்கள் கழிப்பறைகளாக பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே, இத்தகைய மக்களைத் திருத்தி கழிப்பறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மத்தியப் பிரதேச அரசு புதிய வித்தியாசமான திட்டம் ஒன்றை அமல் படுத்தியுள்ளது.

சப்தமாக ஒரு விசில்...
மத்தியப் பிரதேச மாநில அரசின் இந்தூர் பகுதிக்குட்பட்ட உள்ளூர் நிர்வாகம், கடந்த நவம்பர் மாதம் பொது இடங்களில் மலம் கழிப்போரைக் கண்டால், அவர்களுக்கு அருகாமையில் சென்று சப்தமாக விசில் அடிக்கும் படி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அறிவுறுத்தி இருந்தது.

பிளான் சக்சஸ்...
இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, பொது இடங்களில் மலம் கழிப்போரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. சிறுவர், சிறுமியர் அவமானப் படுத்தி விடுவார்கள் என அஞ்சியே பலர் தங்களது வீடுகளில் புதிய கழிப்பறைகளைக் கட்டினர்.

அடுத்த கட்டமாக...
இந்த முயற்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இந்த திட்டத்தை அடுத்த கட்டமாக மத்திய பிரதேசத்தில் உள்ள 3 மாவட்டங்களில் விரிவு படுத்தியுள்ளது அம்மாநில அரசு. ஆனால், இம்முறை அவர்கள் மாணவர்களின் உதவியை மட்டும் நாடவில்லை.

திருநங்கைகள்...
இம்மாவட்டங்களில் உள்ள 300 திருநங்கைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களை இந்தத் திட்டத்திற்கு பயன் படுத்துகிறது மத்திய பிரதேச அரசு. இந்த திருநங்கைகளுக்கு முக்கிய வேலை திறந்த வெளியில் மலம் கழிப்பவர்களைக் கண்டால் விசில் அடித்து அவமானப்படுத்த வேண்டுமாம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications