பண உதவி கேட்ட சிறுவனின் தலையை செருப்புக் காலால் உதைத்துத் தள்ளிய பெண் அமைச்சர்: தீயாய் பரவும் வீடியோ
போபால்: தன்னிடம் பண உதவி கேட்ட சிறுவனை, மத்தியப் பிரதேச கால்நடை வளர்ப்புத் துறை பெண் அமைச்சர் செருப்புக் காலால் உதைத்துத் தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் கால்நடை வளர்ப்பு துறை அமைச்சர் குசும் மெதலே. இவர் தூய்மை இந்தியா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று பண்ணா மாவட்டத்திற்கு சென்றிருந்தார். பேருந்து நிலையம் அருகே துப்புரவு பணியில் ஈடுபட்ட அமைச்சர், நிகழ்ச்சி முடிந்து புறப்பட காரை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அமைச்சரிடம் பண உதவி கேட்டுள்ளான் 14 வயது சிறுவன் ஒருவன்.

அச்சிறுவன் ஒரு ரூபாய் மட்டுமே கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், தன் முன் மண்டியிட்டு விழுந்த அச்சிறுவனை தனது செருப்பு அணிந்த காலால் அமைச்சர் உதைத்துள்ளார். உடனடியாக அச்சிறுவனை அமைச்சரின் பாதுகாவலர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் அங்கிருந்து அமைச்சர் புறப்பட்டுச் சென்றார்.
இந்தக் காட்சிகள் வீடியோவாக எடுக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய அமைச்சர் ஒருவர், பண உதவி கேட்ட சிறுவனை மனிதாபிமானம் இன்றி காலால் உதைத்துத் தள்ளிய சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications