அடேங்கப்பா.. 5 வருசத்துல 1982% அதிகரித்த எம்எல்ஏவின் சொத்துமதிப்பு.. மத்திய பிரதேச டேட்டாவை பாருங்க!
போபால்: மத்திய பிரத்சேத்தில் வாக்குப்பதிவு முடிந்து, ரிசல்ட்டுக்காக வேட்பாளர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், வேட்பாளர்களின் சொத்து மதிப்பு விவரங்கள் விவாதங்களைக் கிளப்பியுள்ளன.
ராஜஸ்தான், தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் கடந்த மாதம் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. மத்தியப் பிரதேசத்தில் 230 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப் பேரவைக்கான வாக்குப்பதிவு நவம்பர் 17-ஆம் தேதி நிறைவடைந்தது. 5 மாநிலங்களுக்கும் டிசம்பர் 3 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.

மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் ஒட்டுமொத்தமாக 2,533 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 76 சதவீத வாக்காளர்கள் வாக்குப் பதிவு செய்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முன்னதாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தபோது அவர்கள் குறிப்பிட்ட சொத்து மதிப்பு விபரங்கள் தற்போது விவாதப்பொருளாகி இருக்கிறது.
இந்த சட்டசபை தேர்தலில் வேட்பாளர்களின் சொத்துக்கள் கணிசமாக உயர்ந்துள்ளது. தேர்தல் ஆணையத்திடம் அளித்த பிரமாணப் பத்திரத்தில், மத்திய பிரதேசத்தில் உள்ள 180 எம்எல்ஏக்கள், 2018-2023ஆம் ஆண்டு முதல் 1 முதல் 1,982 சதவீதம் வரை சொத்துகள் அதிகரித்துள்ளதாகவும், மற்ற 12 எம்.எல்.ஏக்களின் சொத்து மதிப்பு 1 சதவீதம் முதல் 64 சதவீதம் வரை குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மனவார் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ டாக்டர் ஹிராலால் அலவாவின் சொத்து மதிப்பு, கடந்த தேர்தலைக் காட்டிலும் 1982 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேசமயம், சபலகர் தொகுதியில் இரண்டாவது முறையாக எம்.எல்.ஏவாக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் பைஜ்நாத் குஷ்வாஹாவின் சொத்துக்களில் 64 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் ரத்லம் நகர் சேதன்யா காஷ்யப் தான், மத்திய பிரதேச மாநிலத்தின் பணக்கார எம்.எல்.ஏவாக உள்ளார். 2018ல் ரூ.204 கோடியாக இருந்த அவரது சொத்து மதிப்பு 2023ல் ரூ.91.4 கோடி அளவில் உயர்ந்து ரூ.296 கோடியாக அதிகரித்துள்ளது. பாஜகவின் விஜயராகவ்கர் தொகுதி எம்எல்ஏ சஞ்சய் சத்யேந்திர பதக், ரூ.240 கோடிக்கு மேல் சொத்துக்களுடன் உள்ளார் . பணக்கார எம்எல்ஏக்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் பாஜகவின் குரை தொகுதி எம்.எல்.ஏ பூபேந்திர சிங் உள்ளார்.
இதற்கு நேர்மாறாக, ராய்கானைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ கல்பனா வர்மா 2023 ஆம் ஆண்டில் ரூ. 33.65 லட்சம் மதிப்புடைய மொத்த சொத்துக்களுடன் மிகக் குறைந்த சொத்துகளைக் கொண்டுள்ளார், அதேசமயம் 2018 இல் அவரது சொத்து மதிப்பு 14 லட்சமாக இருந்தது. 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு 139 சதவீதம் உயர்ந்துள்ளது.

மத்திய பிரதேச மாநில எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே சொத்து மதிப்பில் பெரிய அளவில் ஏற்றத்தாழ்வு இருப்பது தெரியவந்துள்ளது. பிரமாணப் பத்திரத்தில் தாக்கல் செய்துள்ள விவரங்களின்படி, முதல் 10 பணக்கார எம்எல்ஏக்களின் சொத்து ரூ.1,728.52 கோடி. மற்ற 182 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு ரூ.1,692 கோடி.
மீண்டும் தேர்தலில் போட்டியிடும் அனைத்து 192 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு ரூ.3,507.34 கோடியாகும், இதில் காங்கிரசுக்கு 52.81 சதவீத பங்கு உள்ளது, அதைத் தொடர்ந்து பாஜக வேட்பாளர்களுக்கு 46.05 சதவீத சொத்து உள்ளது. மற்றவர்களுக்கு 3.58 சதவீத சொத்து உள்ளது. இந்த டேட்டா, மத்திய பிரதேச மாநிலத்தின் அரசியல் சூழ்நிலையில் இரண்டு பெரிய கட்சிகளின் பொருளாதார மேலாதிக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications