மோடியை பற்றி இப்படியா பேசுவீங்க? வார்த்தையை விட்ட காங்., "தலை".. கொத்தோடு தூக்கிய போலீஸ்
போபால்: பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்யுமாறு பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜா படேரியாவை மத்திய பிரதேச போலீஸார் கைது செய்துள்ளனர்.
ராஜா படேரியாவை கண்டித்து மத்திய பிரதேசம் முழுவதும் பாஜகவினர் போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வந்த நிலையில், இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராஜா படேரியா கைது செய்யப்பட்டிருப்பதால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அம்மாநில காங்கிரஸார் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

"அரசியல் சாசனத்தை அழித்துவிடுவார்"
மத்திய பிரதேசத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் ராஜா படேரியா. இவர் நேற்று முன்தினம் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர், "பாஜக ஆட்சியில் அரசியல் சாசனத்தின் அனைத்து சட்டப்பிரிவுகளும் மீறப்பட்டு வருகின்றன. சிறுபான்மையினரும், தலித் சமூகத்தினரும் பாஜக ஆட்சியில் துன்பப்படுகின்றனர். அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இப்படியே போனால், அரசியல் சாசனத்தையே அவர் அழித்துவிடுவார்.

"மோடியை கொல்லுங்கள்"
அதுமட்டுமல்லால், நாட்டு மக்களை மத ரீதியில் பிரதமர் மோடி பிளவுப்படுத்தி வருகிறார். மோடி பிரதமர் பதவியில் தொடர்ந்தால், இந்தியாவில் தேர்தல் என்ற ஒன்றே இல்லாமல் போய்விடும். சர்வாதிகார ஆட்சி அமைந்துவிடும். எனவே, இந்திய அரசியமைப்புச் சட்டத்தை காக்க விரும்பினால் மோடியை கொல்வதற்கு தயாராக இருங்கள்" என ராஜா படேரியா பேசினார்.

போராட்டத்தில் குதித்த பாஜக
இந்நிலையில், ராஜா படேரியாவின் இந்த பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ராஜா படேரியா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய பிரதேசம் முழுவதும் பாஜகவினர் போராட்டத்திலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார்களும் அளிக்கப்பட்டன. இதனிடையே, ராஜா படேரியா தனது பேச்சுக்கு நேற்று விளக்கம் அளித்துள்ளார். அதாவது, "பிரதமர் நரேந்திர மோடியை தோற்கடிக்க வேண்டும் என்ற அர்த்தத்திலேயே நான் அவ்வாறு பேசினேன். இதை வேண்டுமென்றே பாஜகவினர் அரசியலாக்கி வருகிறார்கள்" என்றார்.

கைது நடவடிக்கை
எனினும், அவரது விளக்கத்தை பாஜக ஏற்கவில்லை. இதுகுறித்து மத்திய பிரதேச பாஜக மூத்த தலைவர் நரோதம் மிஸ்ரா கூறுகையில், "ராஜா படேரியாவின் பேச்சை நான் கேட்டேன். அதில் பிரதமர் மோடியை கொலை செய்யுமாறு அவர் கூறுவது அப்பட்டமாக கேட்கிறது. ஒருகாலத்தில், காங்கிரஸ் கட்சி மகாத்மா காந்தியின் கட்சியாக இருந்தது. ஆனால், இப்போதோ இத்தாலி நாட்டின் (சோனியா காந்தி இத்தாலி நாட்டவர்) கட்சியாகவும், முசோலினி கட்சியாகவும் மாறிவிட்டது" என்றார். இதனிடையே, பாஜகவினர் அளித்த புகாரின் பேரில் இன்று அதிகாலை ராஜா படேரியாவை போலீஸார் கைது செய்தனர்.
-
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
"மோடியை மிரட்டுவது ஆபத்து.." புதின் சொன்ன வார்த்தை.. அப்படியே டிரம்ப் மீதும் பாய்ச்சல் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி












Click it and Unblock the Notifications