"மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும் போது" கணவனுக்காக எந்த பெண்ணும் செய்ய துணியாத காரியம்!

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் கல்யாணமான பெண் ஒருவர், 3 வருடத்திற்கு பின் விவாகரத்து செய்து, தனது கணவரை அவரது காதலியுடன் சேர்த்து வைத்துள்ளார்

மத்திய பிரதேசத்தில் வினோதமான ஒரு விவாகரத்து வழக்கு வந்திருக்கிறது. போபாலைச் சேர்ந்த இளம் பெண், ஒருவர் கணவனை திருமணம் நடந்த மூன்றாண்டுகளுக்கு பின் விவகாரத்து செய்துள்ளார்.

இதற்கு காரணம், காதலியை பிரிய மனமில்லாமல் அவரது கணவர் தவித்துள்ளார். இதை கண்டு வேதனைஅடைந்த அவர், எங்கிருந்தாலும் நன்றாக இருங்க என்ற நினைப்பில் முதிர்ச்சியுடன், அவரது காதலியுடன் சேர்த்து வைத்துள்ளார் மனைவி.

பாலிவுட் பட பாணி

பாலிவுட் பட பாணி

இது தமிழில் திருமணம் என்ற சீரியல் ஒன்றில் அண்மையில் பார்த்தாக ஞாபகம், அந்த சீரியலில் இப்படித்தான் ஆரம்பத்தில் கதை போகும். ஆனால் இருவரின் அன்பால் டைவர்ஷ் நடக்காது. இதேபோல் ஐஸ்வர்யா ராய், சல்மான் கான் மற்றும் அஜய் தேவ்கன் நடித்த ஹம் தில் தே சுகே சனம் படத்திலும் காதலிக்காக கணவனை இழக்கும் காட்சிகள் இருக்கும்.

கணவன் விருப்பம்

கணவன் விருப்பம்

இதில் என்ன ஒரு ஆச்சர்யம் என்றால் கணவன், தனது மனைவிக்கு விவாகரத்து எடுக்காமல் தனது காதலியுடன் திருமணம் செய்து கொள்ள விரும்பினார், மேலும் அவர்கள் இருவருடனும் திருமண உறவில் இருக்க வேண்டும் என்று விரும்பி இருக்கிறார். இருப்பினும், இது சட்டப்படி சாத்தியமில்லை என்பதை இருவரும் உணர்ந்திருந்தனர்.

சேர்த்து வைக்க முடிவு

சேர்த்து வைக்க முடிவு

எனவே, அவரது மனைவி தனது காதலியை திருமணம் செய்ய உதவுவதற்காக அவரிடமிருந்து விவாகரத்து எடுக்க முடிவு செய்தார். இதன்படி விவாகரத்து வழங்கி அவர்களை சேர்த்து வைத்துள்ளார்.

திருமணம் செய்ய உதவி

திருமணம் செய்ய உதவி

போபாலில் நடந்த விவகாரத்து வழக்கை நடத்திய தம்பதியின் வழக்கறிஞர் கூறுகையில், இளம் பெண்ணின் அவர் சட்டபூர்வமாக சாத்தியமில்லாத இருவருடனும் திருமண உறவில் இருக்க விரும்பினார், ஆனால் மனைவி மிகவும் முதிர்ச்சியடைந்தவர், அவர் அவரை விவாகரத்து செய்தார் அத்துடன் கணவரும் அவரது காதலியும் திருமணம் செய்ய உதவினார்," என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+