"பாரத் மாதா ஜெய்" என்று சொல்ல மறுத்த முஸ்லிம் வாலிபர்கள் மீது டெல்லியில் தாக்குதல்
டெல்லி: பாரத் மாதா கி ஜெய் என்ற கோஷத்தை முழங்க மறுத்த மதரசா பள்ளி மாணவர்கள் 3 பேர் தாக்கப்பட்ட சம்பவம் தலைநகர் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி புறநகர் பகுதியிலுள்ளது பேகம்பூர். இங்குள்ள மதரசா ஒன்றில் படித்து வருபவர்கள் தில்கஷ், அஜ்மல் மற்றும் நயீம். 17 முதல் 18 வயது நிரம்பிய இவர்கள், நேற்று அருகேயுள்ள பூங்கா ஒன்றில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, 5 பேர் கொண்ட கும்பல், இவர்களிடம் வந்து பாரத் மாதா ஜெய் என சொல்லுமாறு வற்புறுத்தியுள்ளனர்.
பாரத் மாதா ஜெய் என்ற வார்த்தையை நாங்கள் கூற மாட்டோம் என்று அந்த 3 இஸ்லாமிய வாலிபர்களும் கூறியுள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், 5 பேரும், இம்மூன்று வாலிபர்களை தாக்க தொடங்கியுள்ளனர்.
இதனால், அந்த வாலிபர்கள் அருகேயுள்ள மதரசாவிற்குள் ஓடி தப்பிக்கொண்டனர். இதில் ஒரு வாலிபருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், மற்ற இருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்று அடையாளம் தெரியவில்லை. இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications