வர வர கெஜ்ரிவாலை போல ஆகிவிட்டது உச்சநீதிமன்றம்: ம.பி. முதல்வர் சவுகான் சர்ச்சை கருத்து
டெல்லி: நீதி வழங்கும் நடைமுறையில் அரவிந்த் கெஜ்ரிவாலைப்போல உச்ச நீதிமன்றம் இருப்பதாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கருப்பு பணம் வைத்திருப்போர் பெயர்களை எல்லாம் உடனடியாக வெளியே தெரிவிக்க முடியாது என்று மத்திய அரசு கூறிவந்த நிலையில், நேற்று இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாளையே (இன்று) கருப்பு பண பட்டியலிலுள்ளோர் பெயர்களை உச்ச நீதிமன்றத்திடம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
Congratulate Hon'ble Supreme Court of India for being "Arvind Kejriwal" of Justice system today.
— ShivrajSingh Chouhan (@chouhan_shivraj) October 29, 2014 இதையடுத்து எச்.எஸ்.பி.சி வங்கியிடம் திருடப்பட்டு, பிரான்சால் அளிக்கப்பட்ட பட்டியலிலுள்ள பெயர்களை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று தாக்கல் செய்தது. இந்த திடீர் திருப்பங்களால் மத்திய பிரதேச பாஜக முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் அதிருப்தியடைந்துள்ளது போல தெரிகிறது.
இன்று அவர் தனது டிவிட்டர் தளத்தில் ஒரு கருத்தை வெளியிட்டு சர்ச்சைக்குள்ளாகியுள்ளார். அந்த டிவிட்டில் "அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற நீதி நடைமுறையுடன் இன்று உள்ளதற்காக மாண்புமிகு உச்ச நீதிமன்றத்திற்கு வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கருப்பு பண விவகாரத்தை தொடர்ந்து கிளறி வருபவர் கெஜ்ரிவால். ஊழல், கருப்பு பணத்துக்கு எதிராக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிவருபவர். எனவே அவரை ஒப்பிட்டு சிவராஜ்சிங் சவுகான் இவ்வாறு கீச்சிட்டுள்ளார். ஆனால் உச்ச நீதிமன்றத்தின் மீது கோபத்தை காண்பிப்பதாக நினைத்துக் கொண்டு கெஜ்ரிவாலை உயர்த்தி பிடித்துள்ளார் பாஜக முதல்வர் என்றே, அந்த டிவிட்டை படித்த பலரும் நினைத்துக்கொள்கிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications