Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சட்டென சரியும் பக்தர்கள்! மகா கும்பமேளாவில் 100+ பேருக்கு மாரடைப்பு! ஆனால் அடுத்து நடந்த அதிசயம்

Subscribe to Oneindia Tamil

பிரயாக்ராஜ்: 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா பிரயாக்ராஜ் நகரில் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அங்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்குத் தக்க நேரத்தில் சிகிச்சை அளித்துக் காப்பாற்றியுள்ளதாக அங்குள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நிகழ்வு நடைபெறுகிறது. இந்துக்களின் முக்கியமான மத நிகழ்வுகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

mahakumbh mela 2025 2025 spirituality uttar pradesh

அங்குள்ள பிரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் மகா கும்பமேளா நடைபெறும். ஒவ்வொரு முறையும் இதில் உலகெங்கும் இருந்து பல கோடி பக்தர்கள் பங்கேற்பார்கள்.

மகா கும்பமேளா:

இந்தாண்டு மகா கும்பமேளா நிகழ்வு கடந்த ஜனவரி 13ம் தேதி தொடங்கியது. இது பிப்ரவரி மாதம் 26ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மகா கும்பமேளாவைச் சிறப்பாக நடத்தத் தேவையான ஏற்பாடுகளை உத்தரப் பிரதேச அரசும் மத்திய அரசும் செய்துள்ளது. குறிப்பாக அங்கு வரும் பக்தர்களுக்கு நோய்ப் பாதிப்பு ஏற்பட்டால் சிகிச்சை அளிக்கத் தேவையான நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மகா கும்பமேளா தொடங்கியதில் இருந்து இப்போது வரை அங்கு மாரடைப்பு ஏற்பட்ட 100க்கும் மேற்பட்ட பக்தர்களின் உயிரைக் காப்பாற்றப்பட்டுள்ளது.

100க்கும் மேற்பட்ட பக்தர்கள்:

அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவர்கள், சுகாதார குழுவினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாரடைப்பு ஏற்பட்டோருக்குச் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க முடிகிறது. இதன் மூலம் மகா கும்பமேளாவில் இதுவரை 100க்கும் மேற்பட்ட பக்தர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிசயம்:

இது மட்டுமின்றி மகா கும்பமேளாவில் பங்கேற்ற போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட 183 நோயாளிகள் ஐசியு சிகிச்சையையும் பெற்றுள்ளனர். மேலும் 580 சிறிய அறுவை சிகிச்சைகளும் கூட மகா கும்பமேளா வளாகத்திலேயே செய்யப்பட்டன என்று மூத்த சுகாதார அதிகாரி தெரிவித்தார். மேலும், 1.70 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு ரத்தப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு லட்சம் பேர் பிறநோயாளிகள் பிரிவிலும் சிகிச்சை பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. இதுபோல தக்க நேரத்தில் சிகிச்சை கிடைப்பதால் அங்கு எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

சுகாதார அதிகாரிகள்:

இது தொடர்பாக மகா கும்பமேளாவின் மருத்துவ பிரிவின் நோடல் அதிகாரி டாக்டர் கவுரவ் துபே கூறுகையில், "அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மருத்துவச் சிகிச்சை மையத்தை நாங்கள் மகா கும்பமேளாவில் ஏற்பாடு செய்துள்ளோம். இதன் மூலம் இங்கு வரும் பல லட்சம் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்ய முடிகிறது. அவர்களுக்குச் சரியான நேரத்தில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவச் சிகிச்சையை வழங்க முடிகிறது" என்றார்.

சுமார் 100க்கும் மேற்பட்டோருக்கு இதய பாதிப்பு ஏற்பட்டு, மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவர்களுக்குச் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக புல்பூரைச் சேர்ந்த 105 வயதான பாபா ராம் ஜேன் தாஸ் என்பவருக்கும் கூட கடுமையான வயிற்று வலி ஏற்பட்ட நிலையில், அவருக்கும் அங்குள்ள மத்திய மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதென்ன மகா கும்பமேளா மத்திய மருத்துவமனை:

வழக்கமான மருத்துவச் சிகிச்சை, பல் அறுவை சிகிச்சை, எலும்பியல், மகளிர் & குழந்தை மருத்துவம் ஆகியவை அளிக்கும் வகையில் ஒரு பிரத்தியேக மருத்துவக் குழு அங்குச் சுகாதார சேவைகளை வழங்கி வருகிறது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்க 10 படுக்கைகள் கொண்ட ஐசியு வார்டும் தயார் நிலையில் உள்ளது. கூடுதலாக, ஏஐ அடிப்படையில் இயங்கும் கேமராக்களும் நோயாளிகளைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+