மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.. பாஜக கூட்டணி 162 இடங்களில் வெற்றி.. மீண்டும் அரியணை ஏறுகிறது!
Recommended Video
மும்பை: மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் 162 இடங்களில் வெற்றிபெற்று பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் கூட்டணி 104 இடங்களில் வென்றுள்ளது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது.
கடந்த திங்கள் கிழமை இரண்டு மாநில சட்டசபை தேர்தல் மற்றும் 51 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்தது.
இதில் மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தல் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிரா வடஇந்திய அரசியலில் எப்போதும் முடிவுகளை நிர்ணயிக்கும் மாநிலமாக விளங்கி வருகிறது. அங்கு பாஜக மிகவும் வலுவான கட்சியாக இருக்கிறது.

முக்கிய பங்கு
இதனால் கடந்த 2 மாதங்களாக மகாராஷ்டிரா தேர்தல் தேசிய அரசியலில் முக்கிய பங்கு வகித்தது. தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் எல்லாம் இந்த மாநிலத்தில் தேர்தல் முடிவுகளில் அதிக கவனம் செலுத்தியது.மஹாராஷ்டிராவில் பாஜகவிற்கு அடுத்தபடியாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகளும் வலுவான கட்சியாக இருக்கிறது. தற்போது மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா ஆட்சியில் உள்ளது.

என்ன கூட்டணி
பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து இந்த தேர்தலையும் சந்தித்தது.மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகள் உள்ளது. இதில் 124-ல் சிவசேனா போட்டியிட்டது. 164 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டது.

என்ன கூட்டணி
பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து இந்த தேர்தலையும் சந்தித்தது.மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகள் உள்ளது. இதில் 124-ல் சிவசேனா போட்டியிட்டது. 164 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டது.

காங்கிரஸ் கூட்டணி
அதேபோல் இன்னொருபுறம் காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸும் கூட்டணியுடன் தேர்தலை சந்தித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 147 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 121 இடங்களிலும் போட்டியிட்டன.

எவ்வளவு வாக்கு
மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா, பகுஜன் சமாஜ், சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகளும் தேர்தலில் போட்டியிட்டன. நடந்து முடிந்த தேர்தலில் 56.33% வாக்குகள் மட்டுமே பதிவானது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை நடந்தது.

நாள் முழுக்க முன்னணி
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பாஜக சிவசேனா கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது. ஆனால் போக போக காங்கிரஸ் கட்சியும் வேகமாக இடங்களை வென்று முன்னணி பெற்றது. மிக முக்கியமாக தேசியவாத காங்கிரஸ் கணிப்புகளை பொய்யாக்கி பல இடங்களில் முன்னிலை வகித்தது.

இடங்கள் எத்தனை
இந்த நிலையில் மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. மொத்தமாக பாஜக கூட்டணி 162 இடங்களில் வென்றது. காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 45 இடங்கள், தேசியவாத காங்கிரஸ் 53 இடங்கள், சமாஜ்வாதி இரண்டு இடங்கள் என்று மொத்தமாக 104 இடங்களை வென்றது.

மீண்டும் ஆட்சி
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்பதால் பாஜக சிவசேனா கூட்டணி 162 இடங்கள் உடன் ஆட்சி அமைகிறது. சிவசேனா பாஜக கூட்டணியில் தொடரும் என்று அறிவித்துவிட்டதால், பாஜக விரைவில் முதல்வரை அறிவித்து ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications