பள்ளி கேண்டீன்களில் இனி 'ஜங்க் ஃபுட்' விற்கக் கூடாது.. தடைபோட்டது மகாராஷ்டிரா அரசு !
நொறுக்கு தீணிகள் மற்றும் ஜங்க் உணவுகள் ஆகியவற்றை பள்ளிகளில் விற்க தடை விதித்துள்ளது மகாராஷ்டிரா மாநில அரசு.
மும்பை: மகாரஷ்ட்டிரா மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஜங்க் ஃபுட் எனப்படும் நொறுக்குத் தீனி விற்பனைக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
தற்போதைய அவசர உலகில் ஃபாஸ்ட் புட் மற்றும் ஜங்க் புட் உணவுகளையே பெரும்பாலான மக்கள் தினந்தோறும் சாப்பிடுகின்றனர். இதனால் உடலின் பல முக்கிய செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, பல்வேறு உடல் நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

இந்நிலையில் பள்ளிக்குழந்தைகளுக்கு உடல் பருமன் நோய் வராமல் தடுக்கும் வகையில் மகாராஷ்டிர அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, பீட்சா, பர்கர், கேக், பிஸ்கட், சிப்ஸ், நூடுல்ஸ், பன், பேக்கரி வகைகள், கார்பனேட்டட் குளிர்பானங்கள் ஆகிய உணவு வகைகள் பள்ளிகளில் உள்ள கேண்டீன்களில் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், பள்ளிக் குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும் வகையில், சப்பாத்தி, கோதுமை உப்புமா, சாதம், பாயசம், வெஜிட்டபிள் புலாவ், இட்லி வடை சாம்பார், எலுமிச்சை ஜூஸ், தேங்காப்பால், ஜல்-ஜிரா உள்ளிட்ட 20 உணவுப் பொருட்களை பள்ளி கேண்டீன்களில் விற்பதற்கு பரிந்துரைத்து மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.
அதிகப்படியான கொழுப்பு, சர்க்கரை, உப்பு உள்ள உணவுப் பொருட்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே உண்ணாமல் தவிர்ப்பதன் மூலம் உடல் பருமன், பல் நோய்கள், சர்க்கரை நோய், இதயநோய்கள் வராமல் தடுக்கலாம் என்றும் மகாரஷ்ட்டிரா மாநில அரசு தெரிவித்துள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications