For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

19(61) டூ 102(125).. களத்தில் மேஜிக் செய்த ருத்துராஜ்! விழுந்த அணியை தூக்கி.. மேட்சில் என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

காந்தி நகர்: சௌராஷ்டிரா அணிக்கு எதிரான விஜய் ஹசாரே கோப்பை இறுதிப்போட்டியில் மகாராஷ்டிரா அணியின் கேப்டன் ருத்துராஜ் ருத்ர தாண்டவம் ஆடி இருக்கிறார். இந்த தொடர் முழுக்கவே அவர் சிறப்பாக ஆடி வருகிறார்.

2020 ஐபிஎல் தொடரில் கடைசியாக 3 போட்டிகளில் ஆடி அடுத்தடுத்து அரைசதம் அடித்து "ஸ்பார்க்கை" காட்டியவர்தான் சிஎஸ்கே இளம் புயல் ருத்துராஜ். அதன்பின் 2021 ஐபிஎல் தொடரில் 700+ ரன்களை எடுத்து தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரராகவும் ருத்துராஜ் உருவெடுத்தார்.

இதன் மூலம் தற்போது இந்திய அளவில் கவனிக்கப்படும் வீரராக ருத்துராஜ் உருவெடுத்து உள்ளார். இந்த நிலையில்தான் தற்போது நடந்து வரும் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் மிக முக்கியமான வீரராக விஸ்வரூபம் எடுத்துள்ளார்.

எனக்கு அதெல்லாம் தெரியாது.. இன்னிங்ஸ் முடித்துவிட்டு பேசிய ருத்துராஜ்.. ப்பா என்ன மனுசன்யா எனக்கு அதெல்லாம் தெரியாது.. இன்னிங்ஸ் முடித்துவிட்டு பேசிய ருத்துராஜ்.. ப்பா என்ன மனுசன்யா

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

இந்த தொடரில் மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக ருத்துராஜ் ஆடி வருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் மகாராஷ்டிரா அணி சறுக்கும் போதெல்லாம் அவர்களை காப்பாற்றி கரை சேர்ப்பது ருத்துராஜ்தான். கேப்டன் என்றால் பிரஷர் இருக்கும் என்பார்கள். ஆனால் அந்த பிரஷரை எல்லாம் காலி செய்துவிட்டு.. கேப்டன் என்பதாலேயே முன்பை விட இப்போது சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டு இருக்கிறார். தற்போது சௌராஷ்டிரா அணிக்கு எதிராக மகாராஷ்டிரா அணி விஜய் ஹசாரே கோப்பை தொடரை இறுதிப்போட்டியில் ஆடிக்கொண்டு இருக்கிறது.

பைனல்ஸ்

பைனல்ஸ்

இதில் முதலில் இறங்கிய மகாராஷ்டிரா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. டாப் ஆர்டர் வீரர்கள் எல்லோரும் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தனர். ஆசிம் காசி, நவுஷாத் ஷேக் என்ற இரண்டு வீரர்கள் மட்டும் மிடில் ஆர்டரில் 30+ ரன்களை எடுத்து கொஞ்சம் நம்பிக்கை கொடுத்தனர். மற்றபடி டாப் ஆர்டர் வீரர்கள் வரிசையாக அவுட் ஆனார்கள். அதிலும் சிராக் ஜானி வரிசையாக 3 விக்கெட்டுகளை எடுத்து ஹாட் டிரிக் மூலம் மகாராஷ்டிரா அணியை நிலைகுலைய வைத்தார். இன்னொரு பக்கம் விக்கெட்டை இழக்காமல் ருத்துராஜ் மட்டும் நிதானமாக ஆடிக்கொண்டு இருந்தார்.

நிதானம்

நிதானம்

நிதானம் என்றால் ஒருநாள் போட்டியில் 61 பந்துகளை பிடித்து 19 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். இது ஒன்றும் டெஸ்ட் கிடையாது. எதிர்பக்கம் விக்கெட் விழுகிறது என்பதால் இவர் பால்ஸ் ஷாட் ஆடாமல் மிகவும் நிதானமாக ஆடிக்கொண்டு இருந்தார். ஆனால் 61 பந்துகளை பிடித்த பின் கடைசி 64 பந்துகளில் அடித்து வெளுக்க தொடங்கினார். 19 ரன்களில் இருந்தவர் கடைசி 64 பந்துகளில் அதிரடி காட்டி 108 ரன்களை தொட்டார். வரிசையாக அடுத்தடுத்து சிக்ஸ், பவுண்டரி என்று அதிரடி காட்டிய ருத்துராஜ் இன்று மட்டும் 7 பவுண்டரி 4 சிக்ஸ் அடித்தார்.

மாஸ்

மாஸ்

மகாராஷ்டிரா அணி துவண்டு கிடந்த போது ஒரு கேப்டனாக மாஸ் காட்டி.. ஆட்டத்தையே திசை திருப்பி உள்ளார். இந்த போட்டி மட்டுமல்ல இந்த தொடர் முழுக்கவே அவர் சிறப்பாக ஆடி உள்ளார். கடந்த 10 போட்டிங்களில் அவர் அடித்த ஸ்கோர் பின்வருமாறு.

- 136 (112).
- 154* (143).
- 124 (129).
- 21 (18).
- 168 (132).
- 124* (123).
- 40 (42).
- 220* (149).
- 168 (126).
- 108 (131).

 எத்தனை போட்டிகள்

எத்தனை போட்டிகள்

கடத்தி 10 புட்டிகளில் 8 போட்டிகளில் விஜய் ஹசாரே கோப்பையில் ருத்துராஜ் சதம் அடித்து உள்ளார். இதில் மூன்று போட்டிகளில் நாட் அவுட். ஒரு போட்டியில் 220 ரன்கள் அடித்தார். இந்த போட்டியில் ஒரே ஓவரில் நோ பால் உட்பட 7 சிக்ஸ் அடித்து அசத்தினார். கடந்த 10 போட்டிகளில் இவர் எடுத்த ரன்கள் 1263. ஆவரேஜ் 180.42. அதிலும் காலிறுதி, அரையிறுதி, இறுதி போட்டி மூன்றிலும் அவர் சதம் அடித்துள்ளார். மேலும் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் அதிக செஞ்சுரி அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

விஜய் ஹசாரே

விஜய் ஹசாரே

விஜய் ஹாசரே தொடரில் மட்டும் மொத்தமாக இவர் 11 செஞ்சுரி அடித்துள்ளார். இன்று கடைசி 29 பந்துகளில் மட்டும் இவர் 50 ரன்களை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் முழுக்க பல வீரர்கள் செஞ்சுரி அடித்தாலும், தொடர்ந்து பார்மில் இருந்தது என்னவோ ருத்துராஜ்தான். இந்த தொடர் மூலம் பிசிசிஐ கதவை தட்டுவதற்கு பதிலாக.. பிசிசிஐ அமைப்பையே தன் வீட்டு கதவை தட்ட வைத்து உள்ளார். இந்திய அணியில் பண்ட், கே எல் ராகுல், இஷான் கிஷான் என்று ஓப்பனிங் இடத்திற்கு போட்டியிடும் வீரர்கள் எல்லோரும் சொதப்பி வரும் நிலையில் ருத்துராஜ் இந்த போட்டியில் லீடிங் எடுத்து உள்ளார்.

English summary
Maharashtra captain Ruturaj Gaikwad creates new history by thrashing another century in VIjay Hazare Finals.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X