தேர்தலில் 11வது முறையாக வெற்றி பெற்ற தேஷ்முக்: 12 வெற்றிகளுடன் அசைக்க முடியாத இடத்தில் கருணாநிதி
Subscribe to Oneindia Tamil

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கட்சியை சேர்ந்த கண்பத்ராவ் தேஷ்முக்(88) போட்டியிட்டார். அவர் தான் போட்டியிட்ட சோலாபூர் மாவட்டத்தில் உள்ள சங்கோலா தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். சட்டசபை தேர்தலில் இது அவர் பெற்றுள்ள 11வது வெற்றி ஆகும்.
திமுக தலைவர் கருணாநிதி 12 சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்றது தான் இதுவரை அதிகபட்ச வெற்றியாக உள்ளது. தேஷ்முக் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டது இது 13வது முறை ஆகும்.
அவர் 1962ம் ஆண்டு முதல் முறையாக எம்.எல்.ஏ. வாக தேர்வானார். கடந்த 2012ம் ஆண்டில் அவர் சட்டசபையில் 50 ஆண்டுகள் பூர்த்தி செய்ததற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
தேஷ்முக் 2 முறை அமைச்சராகவும் இருந்துள்ளார். முதல் முறையாக அவர் 1978ம் ஆண்டு அமைச்சர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications