அரசு ஊழியர்களுக்கு மிக மகிழ்ச்சியான அறிவிப்பு.. நம்மூர்ல இல்லைங்க.. மகாராஷ்டிராவில்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் அரசு ஊழியர்கள் இனி வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் வேலை செய்தால் போதும் என்ற திட்டத்தை அந்த மாநில அரசு கொண்டு வருகிறது.

மகாராஷ்டிராவில் மாநில அரசு துறைகள் மற்றும் அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி மன்றங்களில் சுமார் 20 லட்சம் அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். தற்போது மகாராஷ்டிராவில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை வாரத்தில் 6 நாட்கள் அரசு ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். எனினும் மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை நாளாகும். வங்கியில் உள்ளது போன்ற நடைமுறையே இதுவரை மகாராஷ்டிராவில் இருக்கிறது.

Maharashtra government employees will work Five-day working week from February 29

ஆனால் மகாராஷ்டிரா அரசு ஊழியர்கள் வாரத்தில் வேலை நாட்களை ஐந்து நாட்களாக குறைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஒரு வேலை நாளை குறைப்பதன் மூலம் அரசுக்கு நிறைய பணம் மிச்சமாகும் என்றும், இதன் மூலம் செலவுகளை குறைக்க முடியும் என்றும் அரசு ஊழியர்கள் கோரியிருந்தனர்.

இந்நிலையில் நேற்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் மாநில அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வேலை நாட்களை ஐந்து நாள்களாக குறைக்க முடிவு எடுக்கப்பட்டது. இந்த புதிய நடைமுறை வரும் பிப்ரவரி 29ம் தேதி முதல் மகாராஷ்டிரா முழுவதும் நடைமுறைக்கு வருகிறது. பிப்ரவரி 29ம் தேதி இந்த மாதத்தின் ஐந்தாவது சனிக்கிழமையாகும்.

இதன்படி இனி மார்ச் முதல் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே அரசு அலுவலகங்கள் இயங்க உள்ளது. எனினும் மக்களுக்கு ஏற்படும் அசவுகரியத்தை போக்குவதற்காக தினமும் வேலை நேரம் 45 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து நாட்களும் வழக்கமாக வேலை செய்யும் நேரத்தைவிட மகாராஷ்டிரா அரசு ஊழியர்கள் கூடுதலாக 45 நிமிடம் வேலை செய்ய வேண்டும். மகாராஷ்டிரா அரசின் இந்த புதிய முடிவு அரசு ஊழியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+