மும்பை: மகாராஷ்டிரா முதல்வராக நாளை உத்தவ் தாக்கரே பதவியேற்க உள்ளார். அவரது பதவி ஏற்பு விழாவுக்கு காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள், மே. வங்க முதல்வர் மமதா பானர்ஜி, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
Nov 27, 2019, 4:16 pm IST
உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க சோனியாவுக்கும் அழைப்பு
Nov 27, 2019, 4:15 pm IST
உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழாவுக்கு மமதா பானர்ஜி, கேஜ்ரிவால், காங். முதல்வர்கள் மற்றும் ஸ்டாலினுக்கு அழைப்பு
Nov 27, 2019, 9:39 am IST
ஆளுநர் கோஷ்யாரியை மரியாதை நிமித்தமாக ராஜ்பவனில் சந்தித்தார் உத்தவ் தாக்கரே
#WATCH Shiv Sena Chief & 'Maha Vikas Aghadi' (NCP-Congress-Shiv Sena alliance) CM candidate, Uddhav Thackeray and his wife Rashmi meet #Maharashtra Governor Bhagat Singh Koshyari at Raj Bhawan. #Mumbaipic.twitter.com/cubFSPPPHR
சட்டசபைக்கு வந்த அஜித் பவாரை சிரித்த முகத்துடன் வரவேற்றார் சுப்ரியா சுலே
Nov 27, 2019, 8:14 am IST
தேசியவாத காங். தலைவர்கள் அஜித் பவார், சுப்ரியா சூலே உள்ளிட்டோரும் சட்டசபைக்கு வருகை
Mumbai: NCP leaders Ajit Pawar & Supriya Sule arrive at the assembly, ahead of the first session of the new assembly today. Oath will be administered to the MLAs in the assembly today. #Maharashtrapic.twitter.com/lyGtcCunif
பதவி ஏற்பதற்காக சட்டசபைக்கு எம்.எல்.ஏக்கள் வருகை தர தொடங்கினர்
Nov 27, 2019, 7:56 am IST
சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக மும்பை சித்தி விநாயகர் கோவிலில் ஆதித்யா தாக்கரே சிறப்பு வழிபாடு
Mumbai: Shiv Sena leader Aaditya Thackeray offers prayers at Siddhivinayak Temple, ahead of the first session of new assembly today. From 8.00 am onwards, oath will be administered to the MLAs in the assembly. #Maharashtrapic.twitter.com/drMVjqOGIy
மகாராஷ்டிரா சட்டசபை சிறப்புக் கூட்டம் இன்று காலை 8 மணிக்கு கூடுகிறது; அனைத்து எம்.எல்.ஏக்களும் பதவியேற்கின்றனர்
Maharashtra Governor Bhagat Singh Koshyari writes to Uddhav Thackeray stating,"as requested today orally,the oath of office&secrecy would be administered to you on Thursday, 28 November at 1840 hours at Shivaji Park, Dadar, Mumbai." pic.twitter.com/ZbdA7qSkUW
ஆளுநரை சந்தித்த பின் 3 கட்சித் தலைவர்களும் அதிகாலை 1 மணிவரை ஆலோசனை
Nov 27, 2019, 7:40 am IST
மும்பை சிவாஜி பூங்காவில் நாளை மாலை 6.40 மணிக்கு உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி ஏற்கிறார்
Nov 27, 2019, 7:40 am IST
உத்தவ் தாக்கரேவை நாளை ஆட்சி அமைக்க அழைத்தார் ஆளுநர் கோஷ்யாரி
Nov 27, 2019, 7:31 am IST
மகாராஷ்டிரா சட்டசபையின் சிறப்பு கூட்டத் தொடர் இன்று காலை 8 மணிக்கு கூடுகிறது. இதில் எம்.எல்.ஏக்கள் அனைவரும் பதவி ஏற்க உள்ளனர். அம்மாநில முதல்வராக மகா ஆகாஸ் விகாதியின் உத்தவ் தாக்கரே நாளை மாலை 6.40 மணிக்கு பதவி ஏற்க உள்ளார். இதற்கான அழைப்பை ஆளுநர் கோஷ்யாரி விடுத்துள்ளார்.
சரத்பவாரை சந்திக்க சகோதரர் சீனிவாஸ் பவார் வீட்டில் இருந்து புறப்பட்டார் அஜித் பவார்
Nov 26, 2019, 8:55 pm IST
பிரதமர் மோடியை மட்டுமல்ல.. உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் கூட உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்போம்: சஞ்சய் ராவத்
Nov 26, 2019, 8:41 pm IST
ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் உத்தவ் தாக்கரே; டிசம்பர்1-ல் சிவாஜி பூங்காவில் உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா நடைபெறும்: நவாப் மாலிக்
Nov 26, 2019, 8:30 pm IST
சத்ரபதி சிவாஜி கனவு கண்ட மகாராஷ்டிராவை நாம் உருவாக்குவோம்- உத்தவ் தாக்கரே
Nov 26, 2019, 8:30 pm IST
நான் எதற்கும் அஞ்சவும் இல்லை... பொய்கள் என்பது இந்துத்துவாவின் அங்கம் அல்ல- உத்தவ் தாக்கரே
Nov 26, 2019, 8:27 pm IST
தேவேந்திர பட்னாவிஸ் எழுப்பிய அத்தனை கேள்விகளுக்கும் நான் பதிலளிக்க தயார்- உத்தவ் தாக்கரே
Nov 26, 2019, 8:26 pm IST
நான் மட்டுமல்ல நீங்கள் அனைவருமே இம்மாநிலத்தின் முதல்வர்கள்தான்; இன்றைய நிகழ்வுதான் உண்மையான ஜனநாயகம்- உத்தவ் தாக்கரே
Nov 26, 2019, 8:25 pm IST
ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்து தேசத்துக்கு புதிய பாதையை காட்டியுள்ளோம்- உத்தவ் தாக்கரே
Nov 26, 2019, 8:25 pm IST
மாநிலத்தின் முதல்வராவேன் என ஒருபோதும் கனவு கண்டது இல்லை; சோனியா காந்திக்கும் மற்றவர்களுக்கும் நன்றி- உத்தவ் தாக்கரே
Nov 26, 2019, 8:12 pm IST
இன்னும் சற்று நேரத்தில் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் உத்தவ் தாக்கரே
Nov 26, 2019, 7:54 pm IST
மகாராஷ்டிரா முதல்வராக டிசம்பர் 1-ல் உத்தவ் தாக்கரே பதவியேற்கிறார்
Nov 26, 2019, 7:54 pm IST
3 கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் பதவிக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஒருமனதாக தேர்வு
Nov 26, 2019, 7:33 pm IST
மகாராஷ்டிராவில் என்சிபி-காங்-சிவசேனா இணைந்த மகா விகாஸ் ஆகாதி எனும் புதிய கூட்டணி அதிகாரப்பூர்வமாக உதயமானது
Nov 26, 2019, 7:33 pm IST
மகா விகாஸ் ஆகாதி - புதிய கூட்டணிக்கான தீர்மானம் 3 கட்சிகளின் எம்.எல்.ஏக்களால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
Nov 26, 2019, 7:31 pm IST
3 கட்சிகளின் மகா விகாஸ் ஆகாதி - புதிய கூட்டணிக்கான தீர்மானத்தை கொண்டுவந்தார் சிவசேனாவின் ஏக்நாத் சிண்டே
READ MORE
10:50 AM, 11 Nov
காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க அகமது படேல், கேசி வேணுகோபால், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் சோனியா இல்லத்துக்கு வருகை தந்தனர்.
Delhi: Senior Congress leaders Ahmed Patel, KC Venugopal, and Mallikarjun Kharge arrive for Congress Working Committee (CWC) meeting at party interim President Sonia Gandhi's residence, over the political situation in Maharashtra. https://t.co/6AYpQXMdc0pic.twitter.com/cLpWEeHb5X
மகாராஷ்டிராவில் கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை,
காங்கிரஸ் கட்சியுடன் பேசிய பிறகே முடிவு செய்யப்படும்.
சிவசேனாவிற்கு ஆதரவு தருவது குறித்து ஆலோசித்து வருகிறோம் - சரத் பவார் பேட்டி.
10:51 AM, 11 Nov
சிவசேனா புதிய ஆட்சி அமைக்க குறைவான நேரமே ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் நோக்கத்தில்தான் சிவசேனாவுக்கு குறைவான நேரம்- சஞ்சய் ராவத்
10:51 AM, 11 Nov
மகாராஷ்டிராவில் சிவசேனாவால் நிலையான அரசை தர முடியும்.
புதிய அரசு அமைக்க பாஜகவுக்கு 72 மணிநேர அவகாசம் கொடுத்தார் ஆளுநர்- சஞ்சய் ராவத்.
10:51 AM, 11 Nov
தேர்தலுக்கு முன்னர் ஒப்புக் கொண்ட அதிகாரப் பகிர்வை பாஜக மதிக்கவில்லை.
மகராஷ்டிராவின் தற்போதைய நிலைக்கு காரணமே பாஜகவின் பிடிவாதம்தான் - ராவத்.
10:51 AM, 11 Nov
மகாராஷ்டிராவில் புதிய அரசு அமையாமல் போனதற்கு பாஜகதான் காரணம்.
மும்பையில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பேட்டி.
10:52 AM, 11 Nov
டெல்லியில் சோனியா காந்தி இல்லத்தில் காங். செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது
10:52 AM, 11 Nov
டெல்லியில் சோனியா காந்தி இல்லத்தில் காங். செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது
11:10 AM, 11 Nov
இன்று மதியம் 2.30 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறது சிவசேனா.
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநரை சந்திக்க முடிவு.
11:11 AM, 11 Nov
சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஆளுநரை சந்திக்கிறார்கள்
12:06 PM, 11 Nov
மகாராஷ்டிரா தேர்தலில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆகையால் எந்த முடிவையும் இணைந்தே எடுப்போம் என்கிறார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்.
12:08 PM, 11 Nov
சிவசேனா- தேசியவாத காங். அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தர காங். முடிவு என தகவல்
12:14 PM, 11 Nov
காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கிரசுக்கு தலா ஒரு துணை முதல்வர் பதவி வழங்க சிவ சேனா முன்வந்துள்ளதாக தகவல்
12:21 PM, 11 Nov
சிவசேனா- தேசியவாத காங். அரசுக்கு ஆதரவா? மாலையில் மீண்டும் கூடி ஆலோசனை நடத்துகிறது காங்..
12:34 PM, 11 Nov
காங்கிரஸ் என்ன முடிவு எடுக்கிறதோ அதன்படிதான் தேசியவாத காங்கிரஸ் முடிவு.
பத்திரிக்கையாளர்களிடம் அறிவித்தார் தேசியவாத காங்கிரசின் நவாப் மாலிக்.
1:09 PM, 11 Nov
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே-தேசியவாத காங். தலைவர் சரத் பவார் ரகசிய இடத்தில் சந்திக்க திட்டம்
1:10 PM, 11 Nov
இன்று மதியம் 2.30 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறது சிவ சேனா குழு?.
ஆட்சியமைக்க உரிமைகோர உள்ளதாக தகவல்.
1:17 PM, 11 Nov
காங்கிரஸ் முடிவுக்கு பிறகு ஆளுநரை சந்திக்க சிவ சேனா எம்எல்ஏக்கள் திட்டம்.
மாலை 4 மணிக்கு சிவ சேனா எம்எல்ஏக்கள் அனைவருடனும் உத்தவ் தாக்ரே ஆலோசனை .
1:25 PM, 11 Nov
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை அவரது இல்லத்தில் சந்திக்க புறப்பட்டனர் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே.
1:44 PM, 11 Nov
மும்பை
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சந்திப்பு
1:45 PM, 11 Nov
மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்த சிவசேனா எம்பி அரவிந்த் சாவந்த் பேட்டி
1:45 PM, 11 Nov
தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதிகளை மீறியது பாஜக என அரவிந்த் சாவந்த் புகார்; அதனால் மத்திய அரசில் தொடர்ந்து நீடிக்க முடியாமல் ராஜினாமா செய்தேன் என சாவந்த் விளக்கம்.
1:48 PM, 11 Nov
மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா எம்பி அரவிந்த் சாவந்த்.
தேர்தலுக்கு முன்பு பாஜக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என குற்றச்சாட்டு.
1:57 PM, 11 Nov
மகாராஷ்டிரா ஆளுநர் கோஷ்யாரியை மாலை 5 மணிக்கு சந்தித்து சிவசேனா ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் உத்தவ் தாக்கரே
2:22 PM, 11 Nov
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்- சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே இடையேயான சந்திப்பு நிறைவடைந்தது.
3:45 PM, 11 Nov
சிவசேனா மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான சஞ்சய் ராவத் மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
4:11 PM, 11 Nov
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வீட்டில் மீண்டும் கட்சித் தலைவர்கள் ஆலோசனை
4:43 PM, 11 Nov
மாலை 6 மணிக்கு ஆளுநரை சந்திக்க சிவ சேனா குழு திட்டம்
5:02 PM, 11 Nov
சோனியா காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட உத்தவ் தாக்ரே.
சிவசேனாவுக்கு ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு தேவை என கோரிக்கை.
5:55 PM, 11 Nov
இன்னும் சற்று நேரத்தில் ஆளுநர் மாளிகை செல்லும் சிவசேனா குழு.
ஆட்சியமைக்க உரிமைகோருகிறது சிவசேனா.