For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அம்மாடியோவ்.. டீக்கு ரூ.3 கோடி செலவு செய்த மகாராஷ்டிர முதல்வர்.. இதிலும் ஊழல் என காங். குற்றச்சாட்டு

மகாராஷ்டிர முதல்வர் அலுவலகத்தில் தேனீருக்கு என மூன்றரை கோடி செலவு செய்யப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மகாராஷ்டிர முதல்வர் அலுவலகத்தில் தேனீருக்கு என ரூ.3 கோடி செலவு- வீடியோ

    மும்பை: மகாராஷ்டிர முதல்வர் அலுவலகத்தில் தேனீருக்கு என மூன்றரை கோடி செலவு செய்யப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக உள்ளார்.

    இந்நிலையில் முதல்வர் அலுவலகத்தில் வழங்கப்படும் தேனீர் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி கேள்வி எழுப்பட்டது. இதற்கு அந்த அலுவலகம் அளித்திருக்கும் பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    577 சதவீதம் அதிகரிப்பு

    577 சதவீதம் அதிகரிப்பு

    அதாவது முதல்வர் அலுவலகத்தில் தேனீர் மற்றும் ஸ்னாக்ஸ்களுக்காக செய்யப்படும் செலவு 577 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015-2016ஆம் ஆண்டு முதல்வர் அலுவலக தேனீர் செலவு 58 லட்சம் ரூபாயாக இருந்தது.

    சஞ்சய் நிருபம்

    சஞ்சய் நிருபம்

    இந்த தேனீர் செலவு 2017 - 2018 ஆம் ஆண்டுகளில் 3.4 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மும்பை மண்டல காங்கிரஸ் கமிட்டி தலைவர் சஞ்சய் நிருபம் தனது டிவிட்டர் பக்கத்தில் மேற்கோள் காட்டியுள்ளார்.

    18591 டீ கப்கள்

    18591 டீ கப்கள்

    தேனீர் மற்றும் ஸ்னாக்ஸிலும் மகாராஷ்டிர அரசு ஊழல் செய்திருப்பதாகவும் அவர் கூறினார். முதல்வர் அலுவலகத்தில் நாள் ஒன்றுக்கு 18 ஆயிரத்து 591 டீ கப்களில் டீ வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தங்க டீயா?

    தங்க டீயா?

    மந்திராலயாவில் உள்ள எலிகளை அழிக்க ஏற்கனவே ஒரு பெரிய ஊழலை மகாராஷ்டிர அரசு செய்திருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தனக்கு தெரிந்து கிரீன் டீ, எல்லோ டீ என இரு வகை உள்ளது. இதில் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஏதாவது தங்க டீயை குடிக்கிறாரா என்று சந்தேகம் உள்ளதாகவும் சஞ்சய் நிருபம் கூறியுள்ளார்.

    எதிர்க்கட்சிகள்

    எதிர்க்கட்சிகள்

    மகாராஷ்டிர முதல்வர் அலுவலகத்தில் தேனீருக்கு கோடி கணக்கில் செலவு செய்யப்படுவதாக வெளியானதகவல் அதிர்ச்சியை எழுப்பியுள்ளது. இப்பிரச்சனையை எதிர்க்கட்சிகள் பூதாகரமாக்கியுள்ளன.

    English summary
    Maharashtra Govt spends rupees 3.34 crore for tea and snacks. Mumbai Regional Congress Committee president Sanjay Nirupam said there was a 577 per cent rise in the bills of tea and snacks served in the chief minister’s office.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X