மகாராஷ்டிராவில் பாஜக அணி 24-30 இடங்களை கைப்பற்றும்- கருத்து கணிப்பு
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரதிய ஜனதா 24 முதல் 30 இடங்களைக் கைப்பற்றும் என்று சி.என்.என்.-ஐபிஎன் - சி.எஸ்.டி.எஸ்- லோக்நிதி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக லோக்சபா தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளை தொடர்ச்சியாக சி.என்.என். வெளியிட்டு வருகிறது. ஏற்கெனவே தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பீகார் மேற்கு வங்க மாநிலங்களின் கருத்து கணிப்புகள் எப்படி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான அணி அதிகமான இடங்களைக் கைப்பற்றும் என்கிறது இந்த கருத்து கணிப்பு.

பாஜக அணிக்கு 24-30 தொகுதிகள்
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் 24-30 இடங்களை பாரதிய ஜனதா, சிவசேனா மற்றும் இந்திய குடியரசுக் கட்சி கூட்டணி கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மொத்தம் 43% சதவீத வாக்குகள் கிடைக்குமாம்.

காங்கிரஸ் அணிக்கு 16-22 தொகுதிகள்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 16 முதல் 22 இடங்கள் கிடைக்குமாம். இந்த அணிக்கு 33% வாக்குகள் கிடைக்குமாம்.

ஆம் ஆத்மிக்கு 5% வாக்கு..
மகாராஷ்டிராவில் ஆம் ஆத்மி கட்சிக்கு 5% வாக்குகள் மட்டுமே கிடைக்குமாம். ஒரு தொகுதி கூட கிடைக்காதாம்.

எம்.என்.எஸ்க்கும் முட்டை
இதேபோல் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா அமைப்பும் 3% வாக்குகளைப் பெற்றாலும் ஒரு இடத்திலும் கூட வெல்லாதாம்.

பிரதேச வாரியாக..
விதர்பா பகுதியில் பாஜக அணிக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே கடும் போட்டி இருக்குமாம்.. மராத்வாடா பகுதியில் பாஜக-சிவசேனா அணிக்கும் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் அணிக்கும் இடையே கடும் போட்டியாம். வடமகாராஷ்டிரா, மும்பை-தானே பகுதியில் பாஜக அணி முன்னணியில் இருக்கிறதாம். மேற்கு மகாராஷ்டிராதான் காங்கிரஸ் அணிக்கு கை கொடுக்கிறதாம்..

நகர்ப்புறங்களில் பாஜகவுக்கு ஆதரவு
மகாராஷ்டிராவின் நகர்ப்புற வாக்காளர்களில் 48% பேர் பாஜக அணியையும் 29% மட்டுமே காங்கிரஸ் அணியையும் ஆதரிக்கிறார்கள். கிராமப்புறங்களில் இரு அணிகளையும் கிட்டதட்ட சம அளவில் பாஜக அணியை 39% பேரும் காங்கிரஸ் அணியை 36% பேரும் ஆதரிக்கின்றனராம்

சாதி ரீதியாகவும் பாஜகவுக்கு ஆதரவு
இந்த மாநிலத்தில் மராத்தா சமூகத்தினர், உயர்ஜாதியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் கணிசமான அளவில் பாஜகவை ஆதரிக்கின்றனர். தாழ்த்தப்பட்ட பழங்குடி இனத்தவரிடையே காங்கிரஸ்- பாஜக அணிகளுக்கு சம அளவிலான ஆதரவு இருக்கிறது.

இஸ்லாமியர்கள் ஓட்டு அப்படியே காங்கிரசுக்கு...
இங்கு இஸ்லாமியர்களில் 84% பேர் ஆதரவு காங்கிரஸ் அணிக்குத்தான் கிடைத்திருக்கிறதாம்.

பால் தாக்கரே வாரிசு..
மகாராஷ்டிராவில் பால் தாக்கரேவின் அரசியல் வாரிசாக சிவசேனா தொண்டர்கள் உள்ளிட்டோர் ராஜ்தாக்கரேவைத்தான் கருதுகின்றனராம். உத்தவ் தாக்கரேவைவிட மிக அதிகமாக 41% ஆதரவு ராஜ் தாக்கரேவுக்குத்தான் இருக்கிறதாம்.

எம்.என்.எஸ். ஆதரவு கூடுதல் பலம்..
நரேந்திர மோடியை பிரதமராக்க மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா ஆதரவு தெரிவித்திருப்பதன் மூலம் பாஜக-சிவசேனா அணிக்கு கூடுதல் பலம் என 40% பேர் கூறியுள்ளனர்.

மோடிக்கு 42%..
இம்மாநிலத்தில் மோடி பிரதமராக வேண்டும் என்று 42% பேரும் ராகுல் பிரதமராக 16% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
-
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்?












Click it and Unblock the Notifications