கழுத்தில் நிற்காமல் தொங்கும் 12 வயது சிறுவனின் தலை: ஆபரேஷன் செய்ய முன்வந்துள்ள டாக்டர்
போபால்: மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவனின் கழுத்து நேராக இல்லாமல் 180 டிகிரி கோணத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதை அறுவை சிகிச்சை செய்து சரி செய்ய டாக்டர்கள் முன்வந்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர் முகேஷ்(40). அவரது மனைவி சுமித்ரா(35). அவர்களுக்கு லலித்(16), மகேந்திர அஹிர்வார், சுரேந்திரா(10) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். அதில் மகேந்திராவின் கழுத்தில் உள்ள தசை வலுவில்லாததால் அவரின் தலை எப்பொழுதும் தொங்கியபடியே உள்ளது. அவரது தலை மார்பு அல்லது தோள் மீது தான் உள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்தில் படித்துவிட்டு டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் கிருஷ்ணன் மகேந்திராவுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்து அவரது தலையை கழுத்தில் வைக்க முன்வந்துள்ளார்.
இது குறித்து கிருஷ்ணன் கூறுகையில்,
நான் மகேந்திரனை பரிசோதனை செய்துள்ளேன். அவருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அது முடிந்த பிறகு அவருக்கு அறுவை சிகிச்சை செய்து கழுத்தை நேராக்குவேன். தலைகீழாக இல்லாமல் இந்த உலகை நேராக அவர் பார்க்க நான் உதவி செய்வேன் என்றார்.
கிருஷ்ணன் அறுவை சிகிச்சையை இலவசமாக செய்தாலும் மருத்துவமனை மற்றும் மருந்து செலவுகளை மகேந்திராவின் பெற்றோர் தான் கவனிக்க வேண்டும். ஏழ்மையில் வாடும் அவர்களால் இது முடியாததாக உள்ளது.
இந்நிலையில் மகேந்திராவின் நிலைமை குறித்து அறிந்த இங்கிலாந்தில் உள்ள லிவர்பூலைச் சேர்ந்த ஜூலி ஜோன்ஸ் என்ற பெண் ஆன்லைன் மூலம் ரூ.10 லட்சம் நிதி திரட்டியுள்ளார். தனது மகனுக்கு உதவ முன்வந்துள்ள டாக்டர் மற்றும் பிற தயாள குணம் உள்ளவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக மகேந்திராவின் தந்தை தெரிவித்துள்ளார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications