பஞ்சாப் வெடிமருந்து ஆலையில் பயங்கர விபத்து.. 23 பேர் பலி.. 30 பேர் படுகாயம்.. தீவிர சிகிச்சை
பஞ்சாப் குர்தாஸ்பூர் வெடிமருந்து ஆலையில் பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
சண்டிகர்: பஞ்சாப் குர்தாஸ்பூர் வெடிமருந்து ஆலையில் பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 23 பேர் பலியாகி உள்ளனர்.
பஞ்சாப் குர்தாஸ்பூர் பகுதியில் சிவகாசி போல அடுத்தடுத்து நிறைய வெடிமருந்து உற்பத்தி மையங்கள் இருக்கிறது. இந்த நிலையில் இன்று மாலை 5.30 மணி அளவில் பஞ்சாப் குர்தாஸ்பூர் பகுதியில் உள்ள பெரிய வெடிமருந்து ஆலையில் விபத்து ஏற்பட்டது.

வெடிமருந்து உற்பத்தியின் போது ஏற்பட்ட தவறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த கட்டிடம் முழுக்க வேகமாக தீ பரவியது. தீ பரவிய சில நிமிடத்தில் கட்டிடத்தின் மேல்கூரை இடிந்து விழுந்தது.
இந்த ஆலையில் விபத்து ஏற்பட்ட நேரத்தில் 75க்கும் அதிகமான நபர்கள் வேலை பார்த்துக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில் இந்த விபத்தில் 23 பேர் பலியாகி உள்ளனர்.
கட்டிடம் இடிந்து விழுந்ததால், 50க்கும் அதிகமானோர் இடிபாடுகளுக்கு உள்ளே சிக்கிக் கொண்டு இருக்கிறார்கள். அங்கு தீ விபத்து ஏற்பட்டு, கட்டிடமும் விழுந்துள்ளதால் மீட்பு பணியை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கட்டிடத்திற்கு அடியில் உள்ளவர்களை மீட்பது இதனால் சிரமமாகி உள்ளது.
மீட்பு பணிகளில் தாமதம் ஆவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதுவரை மிக மோசமான காயங்களுடன் 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு தேசிய பேரிடர் மீட்பு படையினரும், தீயணைப்பு படையினரும் தீவிரமாக மீட்பு பணியை செய்து வருகிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications