மும்பை முறுக்கு பிழியும் கருவி தயாரிக்கும் கடையில் தீ விபத்து.. 12 பேர் பலி
மும்பை : மும்பையில் கய்ராணி சாலையில் உள்ள கடை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 12 பேர் பலியாகி உள்ளனர். தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
மும்பை கய்ராணி சாலையில் உள்ள முறுக்கு பிழியும் கருவி தயாரிக்கும் கடை ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில்,இன்று காலை 4.30 மணி அளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து விடாமல் எரிந்து வரும் தீயை அணைக்க 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். தற்சமயம் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
விபத்து ஏற்பட்ட சமயத்தில் கடைக்கு உள்ளே உறங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் இதில் தீயில் கருகி உயிரிழந்து உள்ளனர். இதுவரை 12 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது.
மேலும், உள்ளே சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்து உள்ளார். இன்னும் தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதுகுறித்து கடை உரிமையாளர் தெரிவிக்கையில், உள்ளே 16 தொழிலாளர்கள் தங்கி பணி புரிந்து வந்தனர். தற்போது மீதம் நால்வர் குறித்து எந்த தகவலும் இல்லை என்று தெரிவித்து உள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications