மோடியின் பதவியேற்பு விழாவில் மாலத்தீவு அதிபர் அப்துல்லா பங்கேற்கிறார்
டெல்லி: பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமின் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று பா.ஜ.க ஆட்சி அமைக்க உள்ளது. இதையடுத்து வரும் 26 ஆம் தேதி மாலை நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு சார்க் நாடுகளின் உறுப்பினர்களுக்கு மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

இதையடுத்து, மோடி பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்பார் என அந்நாட்டு அரசு நேற்று அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த விழாவில் கலந்து கொள்ளப்போவதாக மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமின் தெரிவித்துள்ளார்.
மேலும், மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பது குறித்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று மாலை முடிவெடுக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த விழாவில் பெரும்பாலான சார்க் நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
