மலேகான் குண்டுவெடிப்பு: சாத்வி, புரோகித்துக்கு ஜாமீன் வழங்க தேசிய புலனாய்வு ஏஜென்சி எதிர்ப்பு
டெல்லி: மலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய சாத்வி பிரக்யாசிங் தாகுர் மற்றும் லெப்.கெணல் புரோகித் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க தேசிய புலனாய்வு ஏஜென்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் மலேகானில் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி 3 குண்டுகள் வெடித்தன. இதில் 7 பேர் பலியாகினர் .

முதலில் இந்த சம்பவத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் இது தொடர்பாக விசாரணை நடத்திய மகாராஷ்டிரா சிறப்பு புலனாய்வு அமைப்பினர், இந்த சம்பவத்துக்கு இந்துத்துவா தீவிரவாதிகளே காரணம் என கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து சாத்வி பிரக்யா சிங் தாகுர் மற்றும் லெப். கேணல் புரோகித் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். தற்போது இந்த இருவரும் தங்களுக்கு ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனு மீது செவ்வாய்க்கிழமையன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, இருவருக்கும் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் இருவரையும் காவலில் வைத்து விசாரிக்க வேண்டியுள்ளது என்றும் தேசிய புலனாய்வு ஏஜென்சியின் வழக்கறிஞர் மரியபுதம் கூறினார். மேலும் இருவரும் கடந்த 6 ஆண்டுகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான விசாரணை தாமதமாகிறது என்பதாலேயே ஜாமீன் வழங்க வேண்டும் என்பது ஏற்புடையது அல்ல என்றும் வாதிடப்பட்டது.
அத்துடன் இந்த விசாரணைக்கான தாமதத்துக்கு தேசிய புலனாய்வு ஏஜென்சி காரணம் அல்ல என்றும் 2008 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா சிறப்பு புலனாய்வுதான் விசாரணையை தொடங்கியது; பின்னர்தான் தேசிய புலனாய்வு ஏஜென்சியிடம் ஒப்படைக்கப்பட்டது..இதுதான் விசாரணை தாமதத்துக்கு காரணம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்காக இருவரிடமும் மீண்டும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது என்றும் வலியுறுத்தப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications