இஸ்லாமியர்களுக்கு மட்டும்தான் அதிக குழந்தைகளா? எனக்கு 5 பிள்ளைகள் உண்டு! மோடிக்கு கார்கே பதிலடி
ராய்ப்பூர்: இஸ்லாமியர்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்வதாக பிரதமர் மோடி விமர்சித்து வருகிறார் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்நிலையில், இஸ்லாமியர்களுக்கு மட்டுமதான் அதிக குழந்தைகள் இருக்கிறார்களா? எனக்கு மொத்தம் 5 குழந்தைகள் இருக்கிறார்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மோடிக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்னர் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸவாடாவில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசிய விஷயங்கள் பெரும் விவாதமாக வெடித்தது.

அதாவது, "காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, நாட்டின் சொத்துக்களில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று சொன்னார்கள். உங்களிடம் உள்ள தங்கம் உள்ளிட்ட சொத்துக்களை பறித்து அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்பவர்களிடம் கொடுத்து விடுவார்கள். சட்டவிரோதமாக நாட்டிற்குள் ஊடுருவியர்களிடம் உங்கள் சொத்துக்களை கொடுத்து விடுவார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை அவர்களிடம் கொடுக்க வேண்டுமா? இதை நீங்கள் ஏற்பீர்களா?
இதை செய்வோம் என்றுதான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறார்கள். தாய்மார்கள், சகோதரிகளின் தங்க நகைகளை கணக்கெடுத்து அவற்றை உங்களிடமிருந்து பறித்து அவர்களிடம் கொடுத்துவிடுவார்கள்.
மன்மோகன் சிங் என்ன சொன்னார் தெரியுமா? நாட்டின் சொத்துக்களில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் எனக் கூறினார். சகோதர சகோதரிகளே இதுதான் நகர்ப்புற நக்சல்களின் சிந்தனை. என் தாய்மார்கள், சகோதரிகளின் தாலியை பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை" என்று பேசியிருந்தார். இப்படி பேசியதற்காக பிரதமர் மோடி மீது எதிர்க்கட்சி தலைவர்கள் புகார் அளித்திருந்தனர். தேர்தல் ஆணையமும் இது குறித்து நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்நிலையில், இஸ்லாமியர்களுக்கு மட்டுமதான் அதிக குழந்தைகள் இருக்கிறார்களா? எனக்கு மொத்தம் 5 குழந்தைகள் இருக்கிறார்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மோடிக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
சத்தீஸ்கர் மாநிலம் ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது, "நாங்கள் பெரும்பான்மை மக்களிடம் சென்றுக்கொண்டிருக்கிறோம். எனவேதான் பிரதமர் மோடி, தாலி குறித்தும், இஸ்லாமியர்கள் குறித்தும் பேச தொடங்கியிருக்கிறார். காங்கிரஸ் கட்சி உங்கள் செல்வத்தையெல்லாம் திருடி அதிக குழந்தைகள் பெற்றவர்களிடம் கொடுக்கும் என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இஸ்லாமியர்களிடம் மட்டும்தான் அதிக குழந்தைகள் இருக்கிறார்களா? உண்மையில் ஏழைகளிடம்தான் அதிக குழந்தைகள் இருக்கிறார்கள். ஏழைகளில் செல்வம் கிடையாது. ஆனால் அவர்களின் செல்வங்களாக அதிக குழந்தைகள் இருக்கிறார்கள். ஏழைகள் எல்லா பிரிவிலும் இருக்கிறார்கள். ஆனால் ஏன் மோடி இஸ்லாமியர்களை பற்றி மட்டும் பேசுகிறார்? இஸ்லாமியர்கள் இந்த நாட்டை சேர்ந்தவர்கள். எனது பெற்றோருக்கு நான் ஒரே மகன்தான். ஆனால், எனக்கு 5 குழந்தைகள் இருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications