மே.வங்க அமைச்சர் மீது குண்டு வீச்சு... ரயில்வே அமைச்சரே பொறுப்பு... போட்டு விளாசிய மம்தா!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ரயில் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் அமைச்சர் படுகாயம் அடைந்தார். இது தொடர்பான விசாரணையை மேற்கு வங்காள சிஐடி போலீசார் கையில் எடுத்துள்ளனர்.
ரயில்வே நிர்வாகம்தான் ரயில் நிலையத்திற்குள் பாதுகாப்பிற்கு பொறுப்பாகும்; மாநில அரசு அல்ல. எனவே ரயில்வே அமைச்சர் இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி கூறினார்.
இந்த சம்பவத்தில் அமைச்சர் ஜாகிர் ஹூசைன் மருமகன் உள்பட மேலும் 20 பேர் காயம் அடைந்தனர்.

பெட்ரோல் குண்டு வீச்சு
மேற்கு வங்க மாநிலத்தின் தொழிலாளர் துறை அமைச்சராக இருப்பவர் ஜாகிர் ஹூசைன். இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள முர்ஷிதாபாத் மாவட்டத்திலுள்ள நிமிதிடா ரயில் நிலையத்திற்கு நேற்று இரவு வந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர் திடீரென அமைச்சர் ஜாகிர் ஹூசைன் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தப்பிச் சென்றனர்.

அமைச்சர் படுகாயம்
இதில் படுகாயமடைந்த அமைச்சர் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த சம்பவத்தில் அமைச்சர் ஜாகிர் ஹூசைன் மருமகன் உள்பட மேலும் 20 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று அமைச்சர் சிகிச்சை பெரும் மருத்துவமனைக்கு வந்தார்.

மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
அவரின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார். இந்த சம்பவத்தில் சதிதிட்டம் தீட்டப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய மம்தா பானர்ஜி, ரயில்வே நிர்வாகம்தான் ரயில் நிலையத்திற்குள் பாதுகாப்பிற்கு பொறுப்பாகும்; மாநில அரசு அல்ல. எனவே ரயில்வே அமைச்சர் இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார்.

போலீசார் விசாரணை
இந்த நிலையில் இந்த ரயில் நிலைய தாக்குதல் தொடர்பான விசாரணையை மேற்கு வங்காள சிஐடி போலீசார் கையில் எடுத்துள்ளனர். மேற்கு வங்க சிஐடி போலீசார் குழுவினர் இன்று காலை சம்பவ இடத்திற்கு பார்வையிட்டனர். மேலும், வெடிகுண்டு தாக்குதல் நடத்திய மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications