"ஒரே நொடி." திடீரென தடுமாறிய மம்தா.. ஹெலிகாப்டரில் தவறி விழுந்து காயம்.. என்ன நடந்தது பாருங்க
கொல்கத்தா: ஹெலிகாப்டரில் ஏற முயன்ற போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தடுக்கி விழுந்ததில் காயம் அடைந்துள்ளார். இது தொடர்பாக வீடியோ வேகமாகப் பரவி வருகிறது.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல்கட்டத்தில் 102 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டத்தில் 88 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. மீதமிருக்கும் தொகுதிகளுக்கு அடுத்தடுத்த கட்டங்களில் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் நடக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. அதன்படி மேற்கு வங்கத்திலும் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி மேற்கு வங்க முதல்வர் மம்தா அம்மாநிலம் முழுக்க சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
காயம்: இதற்கிடையே மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி துர்காபூரில் ஹெலிகாப்டருக்குள் ஏற முயன்ற போது தடுமாறி கீழே விழுந்ததில் காயமடைந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
என்ன நடந்தது: துர்காபூரில் முதல்வர் மம்தாவுக்கு ஹெலிகாப்டர் காத்திருந்தது. மம்தா வந்தவுடன் புறப்பட அது தயார் நிலையில். இருந்தது. அங்கே அருகே இருந்த படிக்கட்டுகளில் ஏறி மம்தா, ஹெலிகாப்டருக்குள் சென்றார். உள்ளே அமர செல்லும் போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் அவருக்குப் பெரிதாக காயம் எதுவும் ஏற்படவில்லை.
அருகே இருந்த பாதுகாப்புப் படை வீரர்கள் உடனடியாக மம்தாவுக்கு உதவினர். பெரிதாக காயம் எதுவும் ஏற்படாத நிலையில், அவர் திட்டமிட்டபடி தனது பயணத்தைத் தொடர்ந்தார். அதேநேரம் மம்தாவுக்கு இதுபோல நடப்பது இது முதல்முறை இல்லை.
முதல்முறை இல்லை: கடந்த மார்ச் மாதம் மேற்கு வங்க முதல்வர் மம்தா கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டில் விழுந்ததில் காயமடைந்தார். இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு நெற்றியில் ஆழமான வெட்டுக் காயம் ஏற்பட்ட நிலையில், அது தொடர்பான போட்டோவும் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பி இருந்தது. அவர் மேற்கு வங்க அரசு நடத்தும் எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் அளவுக்குக் காயம் மோசமாக இருந்தது..
அதேபோல கடந்த 2023 ஜூன் மாதமும் அவருக்குக் காலில் காயம் ஏற்பட்டது. மோசமான வானிலை காரணமாக சிலிகுரிக்கு அருகிலுள்ள செவோக் விமான தளத்தில் அவர் சென்ற ஹெலிகாப்டர் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்ட நிலையில், அப்போது மம்தா பானர்ஜிக்கு காலில் காயம் ஏற்பட்டது. அவரது இடது முழங்கால் மூட்டு மற்றும் இடது இடுப்பு மூட்டு ஆகியவற்றில் தசைநார் காயங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது..
மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை அங்கே இந்த முறை மும்முனை போட்டி நிலவுகிறது. இந்தியா கூட்டணியில் இருந்து மம்தா வெளியேறிவிட்ட நிலையில், அங்கு திரிணாமுல் காங்கிரஸ் vs பாஜக vs இந்தியா கூட்டணி என மும்முனை போட்டி நிலவுகிறது.
மேலும் மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவைப் பொறுத்தவரை அனைத்து ஏழு கட்டங்களிலும் அங்குத் தேர்தல் நடக்கிறது, முதல் மற்றும் இரண்டு கட்டத்தில் தலா மூன்று தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்துள்ளது. அடுத்தடுத்து நடக்கும் வாக்குப்பதிவில் மீதமிருக்கும் 36 தொகுதிகளில் அடுத்தடுத்த கட்டங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
-
எம்பினு கூட பார்க்கலையே.. மம்தா மருமகன் அபிஷேக் பானர்ஜியை ஓடஓட விரட்டி தாக்கிய மக்கள்.. ஷாக் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications