ஏ.கே. கங்குலி ராஜினாமா செய்ய மம்தா பானர்ஜி வலியுறுத்தல்
கொல்கத்தா: சட்ட பயிற்சி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நீதிபதி ஏ.கே.கங்குலி மேற்கு வங்க மனித உரிமைகள் ஆணைய தலைவர் பதவியை உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
கடந்த நவம்பர் 6-ந் தேதி சட்ட பயிற்சி மாணவி ஒருவர் தமது வலைத்தள பக்கத்தில் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் தமக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த உச்சநீதிமன்றத்தால் ஒரு குழு அமைக்கப்பட்டது. அக் குழுவும் விசாரணை நடத்தியது.

அப்போது ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. கங்குலிதான் அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து விசாரணை நடத்தி அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. பின்னர் நீதிபதி ஏ.கே.கங்குலி மீது பெண் வழக்கறிஞர் கூறிய புகாருக்கு முகாந்திரம் உள்ளதாகவும், அவர் ஓய்வு பெற்றுவிட்டதால் அவர் மீது உச்சநீதிமன்றம் நடவடிக்கை எதுவும் எடுக்க விரும்பவில்லை என்றும் தலைமை நீதிபதி பி.சதாசிவம் அறிவித்தார்.உள்ளார்.
இவர் தற்போது மேற்கு வங்காள மாநில மனித உரிமை ஆணையராக பதவி வகித்து வருகிறார். தற்போது பாலியல் புகார் எழுந்துள்ளதைத் தொடர்ந்து அவர் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இது தொடர்பாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதினார். இந்நிலையில் தனது பேஸ்புக் பக்கத்தில், நீதிபதி கங்குலி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று மம்தா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications