குமாரசாமிதான் முதல்வர்.. அன்றே சொன்ன மம்தா.. கர்நாடக முடிவை சரியாக கணித்த அரசியல் அறிவு!
கர்நாடகாவில் எந்த கட்சி வெற்றி பெற்றாலும், குமாரசாமிதான் முதல்வராக வருவார் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அன்றே குறிப்பிட்டு இருந்தார்.
Recommended Video

பெங்களூர்: கர்நாடகாவில் எந்த கட்சி வெற்றி பெற்றாலும், குமாரசாமிதான் முதல்வராக வருவார் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அன்றே குறிப்பிட்டு இருந்தார். அவர் சொன்னபடியே தற்போது நடந்துள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது . மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து உள்ளது.இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலேயே பாஜக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தது.
இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 104 இடங்களில் பாஜக கட்சியே முன்னிலை வகிக்கிறது. அதற்கு அடுத்த இடத்தை 76 இடங்களுடன் காங்கிரஸ் பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் 40 இடங்களுடன் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

யார்
தற்போது கர்நாடக அரசியலில் முக்கிய திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இவ்வளவு நேரம் முன்னிலை வகித்து வந்த பாஜக கொஞ்சம் கொஞ்சமாக பெரும்பான்மையை இழந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி பாஜக 104 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 76 ; ஜேடிஎஸ் 41 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தற்போதைய நிலையில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் யாருடைய ஆட்சி அமையும் என்பதில் சஸ்பென்ஸ் ஏற்பட்டுள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கணிப்பு
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளின் படி, கர்நாடகாவில் யாருக்குமே பெரும்பான்மை கிடைக்காது என்று கூறப்பட்டது. அதன்படி காங்கிரஸ், பாஜக, ஜேடிஎஸ் ஆகிய மூன்று கட்சிகளும் பெரும்பான்மை பெறாது. ஜேடிஎஸ் எந்த கட்சியை ஆதரிக்கிறதோ, அந்த கட்சிதான் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டது. ஜேடிஎஸ் யாருக்கு ஆதரிக்கிறதோ அவர்களே ஆட்சி அமைக்க முடியும் என்று கூறியது.

சரி
ஆனால் அப்போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இதில் வித்தியாசமான கணிப்பு ஒன்றை வெளியிட்டார்.இந்த முறை காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளும் ஆட்சி அமைக்க போவதில்லை. இந்த முறை கண்டிப்பாக ஜேடிஎஸ் கட்சிதான் ஆட்சி அமைக்கும். தேவ கவுடாவின் மகன் குமாரசாமிதான் ஆட்சி அமைக்க போகிறார். அவர்தான் முதல்வராக இருப்பார் என்று கூறினார்.

நடந்து இருக்கிறது
தற்போது மம்தா சொன்னது அப்படியே நடந்துள்ளது. காங்கிரஸ் கட்சியானது மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளது. அதோடு, ஜேடிஎஸ் மாநில தலைவர் குமாரசாமியை முதல்வராக அறிவிக்க சம்மதம் என்றும் தெரிவித்துள்ளது. இதனால் பாஜக அதிக இடங்களில் வென்றும் ஆட்சி அமைக்க முடியாத நிலைக்கு சென்றுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications