வெள்ளை சேலை.. குளிருக்கு ஒரு சால்வை.. பறந்து பறந்து பந்தாடிய மம்தா பானர்ஜி!
வைரலாகி வரும் மம்தா பானர்ஜி பாட்மின்டன் விளையாடும் வீடியோ
Recommended Video

கொல்கத்தா: சும்மா பறந்து பறந்து பந்தாடி வருகிறார் மம்தா பானர்ஜி.. பாஜகவை அல்ல.. பாட்மிண்டன் விளையாட்டைதான்!!
நாட்டில் இருக்கிற ஒரே பெண் முதலமைச்சர் இப்போதைக்கு மம்தா பானர்ஜிதான். இவருக்கு அரசியலை தவிர, அதிக அளவு கலை ஆர்வம் உடையவர். நல்ல கவிதைகள் எழுதுவார். அழகாக ஓவியம் வரைவார்.
சமீபத்தில் ஜெர்மனியில் மிக்கி மவுஸ் வேடமிட்ட ஒருவர் கையில் அக்கார்டியன் என்ற இசைக்கருவியை வைத்திருந்தார்.

வைரலான மியூசிக்
அதை பார்த்த மம்தா, அந்த இசைக்கருவியை வாங்கி, திடீரென தேசபக்தி பாடலை வாசிக்க ஆரம்பித்துவிட்டார். இந்த வீடியோ ரொம்ப வைரலாக போனது. இசையை போலவே விளையாட்டிலும் ரொம்ப பிரியம் உள்ளவர் மம்தா. குறிப்பாக பேட்மின்டன் என்றால் இவருக்கு உயிர். இப்போதுகூட பேட்மின்டன் விளையாடி அதனை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

மாநில முதல்வர்
எப்போதுமே பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் தங்களின் சுய விருப்புகளில் அதிக அளவு ஆர்வம் காட்ட மாட்டார்கள். அதற்கு அவர்களுக்கு நேரமும் இருக்காது. ஆனால் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்து கொண்டு மம்தா பானர்ஜி பேட்மின்டன் விளையாடுவது ஆச்சரியமாக உள்ளது.

நேரம் ஒதுக்கினார்
பிர்பும் மாவட்டத்தில் ஒரு விளையாட்டு திருவிழா நடந்துள்ளது. அதில்தான் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு அதிகாரிகளுடன் பேட்மின்டன் விளையாடி இருக்கிறார். இதற்காகவே தனது பிஸி வேலைகளிலும் நேரத்தை ஒதுக்கி இருக்கிறார்.
|
கிராம திருவிழா
அது இரவு நேரம் போல தெரிகிறது... வழக்கமான வெள்ளை சேலைக்கு மேலே குளிருக்கு ஒரு சால்வையை போர்த்தி கொண்டு எதிர்வரும் பாட்மின்டன் பந்தை துள்ளி துள்ளி அடித்து விளையாடுகிறார். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, "எங்களுக்கு விளையாட்டு பிடிக்கும். கிராம விளையாட்டுத் திருவிழாவில் ஒரு சின்ன அடையாளம்" என்றும் பதிவிட்டிருக்கிறார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications