40 நிமிட திக்.. திக்.. நடுவானில் வழி தவறிய மமதாவின் ஹெலிகாப்டர்.. பீதி அடைந்த தீதி!
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் ஹெலிகாப்டர் நடுவானில் வழி தவறி சுற்றி திரிந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் ஹெலிகாப்டர் நடுவானில் வழி தவறி சுற்றி திரிந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஒரு வாரமாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று அவர் ''தினாஜ்பூர்'' பகுதியில் பிரச்சாரம் செய்தார்.

இன்று மமதா முதலில் சிலிகுரி பகுதியில் இருந்து வடக்கு தினாஜ்பூரில் நடக்கும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றார். 1.05 மணிக்கு அவர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு இருக்கிறார். 1.27க்கு அவர் சரியாக கூட்டம் நடக்கும் இடத்திற்கு சென்று இருக்க வேண்டும்.
இந்த கூட்டம் நடக்கும் இடம் வங்கதேச எல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் மமதா சென்ற ஹெலிகாப்டர் கடைசியில் எங்கே இருக்கிறோம் என்று தெரியாமல் வழி தவறி இருக்கிறது. சுமார் 40 நிமிடங்கள் வழி தவறி 1.15ல் இருந்து சுற்றி சுற்றி வந்து உள்ளது.
அதன்பின் பீகார் எல்லைக்குள் அந்த ஹெலிகாப்டர் நுழைந்தது. பின் அங்கிருந்து மீண்டும் புறப்பட்டு விழா மேடையை கண்டுபிடித்து அந்த ஹெலிகாப்டர் வந்தது. சுமார் 22 நிமிடம் தாமதமாக அவர் விழா மேடைக்கு வந்தார். அதுவும் கூட பல முறை கம்யூனிகேஷன் சாதனங்கள் மூலம் வழி காட்டியும், கலர் குண்டுகளை வெடிக்க வைத்தும் ஹெலிகாப்டரை வழி நடத்தி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் மமதா பானர்ஜிக்கு அளிக்கப்பட்டு இருக்கும் பாதுகாப்பில் பெரிய சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. காலதாமதமாக வந்த மமதா தேர்தல் பிரச்சாரத்தில் மக்களிடம் நடந்ததை அப்படியே சொல்லி மன்னிப்பு கேட்டதும் குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
"எங்களை பாஜக கொல்ல பார்க்கிறது.." வங்கத்தை அதிர வைத்த மம்தாவின் குரல்.. உச்சக்கட்ட பதற்றம் -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications