Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ட்விஸ்ட்! வேலையை காட்டும் மம்தா பானர்ஜி.. இந்தியா கூட்டணி மீட்டிங்கிற்கு "நோ".. பாஜகவுடன் போக முடிவா

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: ஜூன் 1-ம் தேதி எதிர்கட்சிகளின் கூட்டணியான இந்திய கூட்டணி முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது. இதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ள மாட்டேன் என்று அறிவித்து உள்ளார்.

தேசிய அளவில் லோக்சபா தேர்தல் தீவிரம் இன்னும் முடியவில்லை. லோக்சபா தேர்தலுக்கான கொண்டாட்டங்கள், பிரச்சாரங்கள் மிக தீவிரமாக நடந்தபடியே இருக்கின்றன. இறுதிக்கட்ட வாக்குபதிவிற்கான பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன.

Mamata Banerjee says no for INDIA alliance meeting Will TMC go with BJP at the end

தற்போதைய மக்களவை தேர்தலில் ஏழாவது மற்றும் கடைசி சுற்று வாக்குப்பதிவு நடைபெறும் நாளில்.. அதாவது ஜூன் 1-ம் தேதி எதிர்கட்சிகளின் கூட்டணியான இந்திய கூட்டணி முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது. இந்திய கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் கூடுவார்கள் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

கலந்து கொள்ள மாட்டார்; இந்த நிலையில்தான் இதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ள மாட்டேன் என்று அறிவித்து உள்ளார். அதன்படி டெல்லியில் வரும் 1ம் தேதி நடைபெற உள்ள இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் குறித்து முன்பே என்னிடம் தெரிவிக்கப்பட்டது.

அன்று மேற்கு வங்கத்தில் சில தொகுதியில் தேர்தல் நடப்பதாலும், புயல் நிவாரணப் பணிகள் காரணமாகவும் என்னால் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முடியாது. எனது முன்னுரிமை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதுதான் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மம்தா முடிவு குழப்பம்: ஏற்கனவே நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் செல்லப் போவதில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்து விட்டார். அங்கே காங்கிரஸ் - திரிணாமூல் ஒன்றாக நிற்கவில்லை. அதோடு பாரத் ஜோடோ நியாய யாத்திரை குறித்து தனக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் புலம்பி இருந்தார்.

லோக்சபா தேர்தலுக்கு பின்பாகவும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சியிடம் இறங்கி செல்லும் எண்ணத்தில் இல்லை என்று கூறப்படுகிறது.

காங்கிரஸ் இல்லாமல்தான் மேற்கு வங்கத்தில் போட்டி என்ற நிலைபாட்டில் உறுதியாக இருந்த மம்தா தற்போது இந்தியாவின் மீட்டிங்கிற்கு செல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார்.

இந்தியா கூட்டணி லடாய்: பல்வேறு கட்சிகள் தேசிய அளவில் ஒன்றிணைந்து உருவாக்கியிருக்கும் இந்தியா கூட்டணியின் கடைசி ஆலோசனைக்கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில்தான் இந்தியா கூட்டணியின் முதல் மோதல் வெளிப்படையாக நடந்தது. சோனியா காந்தி, ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, நிதிஷ்குமார், லல்லுபிரசாத் யாதவ், சரத்பவார், மம்தா, அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட 28 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இதில் நிதிஷ் - திமுக இடையே மோதல் ஏற்பட்டது. அதன்பின் நிதிஷ் கூட்டணியை விட்டும் போனார்.

இந்திய கூட்டணியின் ஒவ்வொரு கூட்டத்திலும் அடுத்த கூட்டம் எப்போது நடக்கும் என்று மட்டுமே ஆலோசனைகள் செய்யப்படுகின்றன. மற்றபடி சீட் ஷேரிங், கூட்டணியின் கொள்கை, பிரதமர் வேட்பாளர் என்று எதுவும் அறிவிக்கப்படுவது இல்லை.

மம்தா ஷாக் அறிவிப்பு; இப்படிப்பட்ட நிலையில்தான், பிரதமரை தேர்வு செய்ய போகும் கூட்டமாக கருதப்படும் இந்தியா கூட்டணியின் ஜூன் 1 மீட்டிங்கிற்கு வர மாட்டேன் என்று மம்தா கூறியுள்ளார். பிரதமரை முடிவு செய்யும் கூட்டமாக பார்க்கப்படும் இந்த கூட்டத்தில் மம்தா கலந்து கொள்ளாதது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

யாருக்கு மெஜாரிட்டி வருகிறது. யாருடன் இருந்தால் மத்திய அரசில் பங்கு கொள்ள முடியும். யாருடன் இருந்தால் நமக்கு பாதுகாப்பு என்பதை எல்லாம் பார்த்துவிட்டு கூட்டணியை முடிவு செய்ய மம்தா திட்டமிடுகிறாரா.. பாஜகவிற்கு மெஜாரிட்டி பிடிக்க தனது தயவு தேவைப்பட்டால் அதை கொடுக்கவும் மம்தா தயாராக இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதாவது எந்த பக்கம் போனால் தனக்கு சாதகம் என்று சோதனை செய்து அந்த பக்கம் செல்வதற்கான திட்டங்களை மம்தா நிதானமாக வகுத்துக்கொண்டு இருக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+