மம்முட்டி பேச்சைக் கேட்டு "குளிச்சேன்".. ஆனா "வெள்ளை"யாகலே.. கோர்ட்டுக்குப் போன வயநாடு சத்து!
வயநாடு: நடிகர் மம்முட்டிக்கு ஒரு சிக்கல். அவர் நடித்த விளம்பரத்தைப் பார்த்து சோப்பு வாங்கிக் குளித்தும் தான் வெள்ளை ஆகவில்லை என்று கூறி கோர்ட்டில் வழக்குப் போட்டுள்ளார் கேரளாவைச் சேர்ந்த ஒருவர்.
சோப்பு, பவுடர், பேஸ்ட் போன்ற விளம்பரங்களில் நடிப்பதற்கு முன்பு ஒருமுறைக்கு நூறு முறை யோசித்துப் பார்த்து நடிக்க வேண்டும். காரணம், அதில் நடிப்பவர்களை வைத்து அந்த தயாரிப்புகள் செமத்தியாக காசு பார்த்து விடுகின்றன. ஆனால் வழக்குகள் பாயும்போது அந்தக் கலைஞர்களுக்குத்தான் பெயர் டேமேஜாகி விடுகிறது.
இப்படி ஒரு சிக்கல்தான் தற்போது மம்முட்டிக்கு வந்துள்ளது. கேரள மாநிலம் வயநாடு பகுதியைச் சேர்ந்த கே.சத்து என்ற சிற்பி மம்முட்டி மீது வழக்குப் போட்டுள்ளார்.

இந்துலேகா ஒயிட் சோப்பு
நடிகர் மம்முட்டி கேரளாவைச் சேர்ந்த இந்துலேகா நிறுவனத்தின் ஒயிட் சோப்பு விளம்பரத்தில் நடித்திருந்தார். இது பிரபலமானது. இந்த விளம்பரத்தைப் பார்த்து சத்து ஒரு சோப்பு வாங்கிப் பயன்படுத்தியுள்ளார். ஆனால் அந்த விளம்பரத்தில் சொன்னதுபோல இவர் "வெள்ளை"க் கலருக்கு மாறவில்லை.. "அப்படியே"தான் இருந்துள்ளார்.

கோர்ட்டில் வழக்கு
இதனால் கோபமடைந்த சத்து நுகர்வோர் கோர்ட்டுக்குப் போய் விட்டார். இந்துலேகா நிறுவனம் மீதும், அதன் விளம்பரத்தில் நடித்த மம்முட்டி மீதும் வழக்குப் போட்டுள்ளார்.

கோர்ட்டு வாங்க
இந்த. வழக்கை ஏற்ற கோர்ட் மம்முட்டிக்கும், மற்றவரா்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும் நேரில் வந்து ஆஜராகுமாறும் மம்முட்டிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கும் அக்டோபர் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சத்துவின் கோபம்
சிற்பியாக இருக்கிறார் சத்து. தான் பாதிக்கப்பட்டது குறித்து அவர் கூறுகையில், நான் ஒரு வருடமாக இந்த சோப்பைப் போட்டு குளித்து வருகிறேன். ஆனால் அவர்கள் சொன்னபோது போல எனது நிறம் மாறவில்லை.

போலித்தனமான விளம்பரம்
இப்படிப்பட்ட சோப்புக்கு மம்முட்டி போன்ற பெரிய நடிகர்கள் விளம்பரம் தருவது அநியாயமாக உள்ளது. இது தவறான விளம்பரம். இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்றார் கோபமாக.

இவர் என்ன செய்வார் பாவம்
ஆனால் மம்முட்டியின் வக்கீலோ, மம்முட்டி ஒரு நடிகர். அவரை தேவையில்லாமல் இதில் இழுத்துள்ளனர். அவர் சொல்லிக் கொடுத்த வசனத்தைப் படித்தார், நடித்தார், அவ்வளவுதான். வெறும் நடிப்புதான் அது. அது அவரது தொழில் என்றார் அவர்.

அதெப்படிண்ணே பளிச்சுனு இருக்கும்...!
இந்த விளம்பரத்தில் மம்முட்டி (வசனம்) பேசுகையில், இந்த சோப்பைப் பயன்படுத்தி வெள்ளை மற்றும் பளிச்சென்ற சருமத்தைப் பெறுங்கள் என்று கூறுகிறார். அதை நம்பித்தான் சத்து வாங்கி இப்போது பளிச்சென்ற மாறாத காரணத்தால் கோர்ட்டுக்குப் போய் விட்டார்.

இவர் ரொம்ப லேட்
ஏற்கனவே இதுபோன்ற பேர்னெஸ் தயாரிப்பு விளம்பரங்களில் நடித்து ஷாருக் கான், சோனம் கபூர், ஐஸ்வர்யா ராய், காத்ரீனா கைப், சோனம் கபூர் போன்றோர் வழக்கு விவகாரங்களில் சிக்கியது நினைவிருக்கலாம். இப்போது மம்முட்டியை இழுத்து விட்டனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications