ரூ. 2000 கோடி போதை மருந்து கடத்தல் வழக்கில் சிக்கினார் நடிகை மம்தா குல்கர்னி
மும்பை: ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தப்பட்ட வழக்கில் நடிகை மம்தா குல்கர்னியை முக்கிய குற்றவாளியாக தானே போலீஸ் இணைத்துள்ளது.
மம்தாவின் கணவர் விக்கி கோஸ்வாமி மீது ஏற்கெனவே போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் பிரபல பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி மீது கடந்த சில நாட்களுக்கு முன் போதைப் பொருள் கடத்தியதாக வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் தனக்கு இது பற்றி எதுவும் தெரியாது என மம்தா குல்கர்னி மறுத்து வந்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 18.5 டன் எஃபிட்ரைன் என்ற ஊக்க மருந்து கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக போலீசார் இதுவரை 10 பேரை கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தானே போலீஸார் மம்தா குல்கர்னியையும் இவ்வழக்கில் சேர்த்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் கென்யாவில் நடந்த போதை கும்பலுடனான சந்திப்பில் மம்தா குல்கர்னி, அவரது கணவர் விக்கி கோஸ்வாமி, அவரது தொழில்முறை நண்பர் டாக்டர் அப்துல்லா. ஏவான் லைஃப்சயின்சஸ் நிறுவனத்தின் இயக்குநர் மனோ ஜெயின், ஜெய் முகி அகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
தற்போது வெளிநாட்டில் உள்ள மம்தா குல்கர்னி, விக்கி கோஸ்வாமிக்கு எதிராக இன்டர்போல் உதவியுடன் விரைவில் ரெட் கார்னர் நோட்டீஸ் விநியோகிக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் மீதான போதைப் பொருள் வழக்கு குறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த தானே போலீசார், மம்தா குல்கர்னி மீதான போதை பொருள் வழக்கி்ல் புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளது. அதனால் தற்போது அவரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இவ்வழக்கில் அவரது கணவர் விக்கி கோஸ்வாமி ஏற்கனவே குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். சிபிஐ மூலம் அவருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் தர சர்வதேச போலீசிடம் கேட்டுள்ளோம். அவரது வங்கி கணக்குகளும் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் மேலும் சில பாலிவுட் பிரபலங்களும் சிக்குவார்கள் என போலீஸ் தரப்பில் கூறப்படுவதால் பாலிவுட் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications