மனைவியின் தலையை வெட்டி கையில் எடுத்துக் கொண்டு தெருவில் நடந்த நபர்
புனே: மகாராஷ்டிரா மாநிலத்தில் 60 வயது நபர் ஒருவர் தனது மனைவியின் தலையை வெட்டி அதை கையில் பிடித்துக் கொண்டு சாலையில் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள கத்ராஜ் பகுயில் உள்ள ஹவுசிங் சொசைட்டியில் காவலாளியாக இருப்பவர் ராமு சவான்(60). அவருக்கு தனது மனைவி சோனுபாய்க்கும்(45), மருமகனுக்கும் கள்ளத்தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து அவர் இன்று தனது மனைவியின் தலையை கோடரியால் வெட்டினார். வெட்டிய தலையை ஒரு கையிலும், கோடரியை மறுகையிலும் பிடித்துக் கொண்டு அவர் சாலையில் நடந்து சென்றார். இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவரை வழியில் பார்த்த போலீசார் ராமுவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். போலீசார் ராமு மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
ராமு கத்ராஜ் பகுதியில் தனது மனைவி, இரண்டு மகன்கள், மருமகள் மற்றும் 2 பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார். கொலை தொடர்பாக ராமுவின் குடும்பத்தாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications