குளித்துக் கொண்டிருந்த மனைவியை ஆசிட் வீசி கொன்று கணவனும் தற்கொலை!
திருவனந்தபுரம்: மனைவியை ஆசிட் வீசி கொலை செய்து கணவனும் தற்கொலை செய்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தின், இரும்புபாலம் என்ற ஊரை சேர்ந்தவர் ஷிபு (36). இவரது மனைவி ஜோத்சனா (32). ஷிபு கூலித்தொழில் செய்துவந்த நிலையில், ஜோத்சனா, பேக்கரி ஒன்றில் வேலை பார்த்தார்.

இந்நிலையில், சம்பவத்தன்று, ஜோத்சனா குளித்துக்கொண்டிருந்தபோது, பாத்ரூமுக்குள் சென்ற ஷிபு அவரிடம் நெருக்கமாக இருப்பது போல பாவனை செய்துள்ளார். அதை ஜோத்சனா நம்பிக்கொண்டிருந்த நிலையில், திடீரென மனைவி மீது ஆசிட்டை வீசியுள்ளார் ஷிபு.
துடிதுடித்து அலறிய ஜோத்சனாவை பக்கத்து வீட்டுக்காரர்கள், ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதை கேள்விப்பட்டதும், ஷிபு தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். இத்தம்பதிகளுக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில், குடும்ப பிரச்சினையால் இந்த சம்பவங்கள் நடந்துள்ளதாக போலீசார் கூறினர்.
இதனிடையே, ஆலப்புழா மாவட்டம் செர்தலா நகரில் ஸ்கூட்டரில் சென்ற ஷரிமோல் (24) என்ற பெண் மீது மர்ம நபர் ஆசிட் வீசியுள்ளார். ஹெல்மெட் அணிந்திருந்ததால் முகத்தில் ஆசிட் படாமல் அப்பெண் தப்பினாலும், வயிறு, கால்களில் ஆசிட் வீச்சு பட்டதால், மயக்கமடைந்தார். சாலையில் சென்றவர்கள் எர்ணாக்குளம் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.












Click it and Unblock the Notifications