தண்டவாளத்தை கடக்க முயற்சித்தபோது சரக்கு ரயிலில் சிக்கிய நபர்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ வைரல்
சரக்கு ரயிலில் சிக்கிய நபர் சாதுர்த்தியமாக தப்பிய வீடியோ வைரலாகியுள்ளது.
Recommended Video

அனந்தபூர்: ஆந்திராவில் ஓடும் ரயிலின் அடியில் சிக்கிய நபர், சாதுர்யமாக உயிர் தப்பிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன், பயணி ஒருவர் தண்டவாளத்தைக் கடக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்தப் பாதையில் சரக்கு ரயில் ஒன்று வேகமாக வந்துள்ளது. ரயிலைக் கண்டு அதிர்ச்சியடையாமல், சாதுர்யமாக யோசித்த அந்நபர், இரு தண்டவாளத்திற்கும் நடுவே படுத்துக் கொண்டார்.

ரயில் அவரைக் கடந்து செல்லும் வரை, சுமார் ஒரு நிமிடங்களுக்கும் மேலாக அசையாமல் அங்கேயே அவர் படுத்திருந்தார். பின்னர் ரயில் சென்றதும் அந்நபர் அங்கிருந்து எழுந்துச் சென்றார்.
பதைபதைக்க வைக்கும் இந்தக் காட்சிகளை ரயில் நிலையத்தில் இருந்த ஒருவர் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
ரயிலுக்கு அடியில் படுத்திருந்த நபருக்கு 45 வயதிருக்கலாம் எனத் தெரிகிறது. ஆனால், அவர் யார் என்பது குறித்த அடையாளங்கள் தெரியவில்லை. அடுத்த நடைமேடைக்குச் செல்வதற்காக பாலத்தைப் பயன்படுத்தாமல் அந்நபர் தண்டவாளத்தைக் கடந்து சென்றபோது, இந்த சம்பவம் நடந்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications