விபச்சாரம்.. உறவுக்கு மறுத்த பெண்ணின் மார்பகத்தை பிளேடால் கிழித்து.. நடுங்கிபோன "சிவப்பு விளக்கு"
பிளேடால் பெண்ணின் மார்பகத்தை கிழித்த நபர் கைதானார்
புனே: பாலியல் தொழில் செய்யும் பெண்ணின் மார்பகத்தை பிளேடால் சரமாரியாக கிழித்து, தாக்கிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புனேயில் உள்ள புதுவார்பேட்டில் என்ற இடம் சிவப்பு விளக்கு பகுதியாகும்.. அதாவது நம் நாட்டிலேயே மிகப்பெரிய பாலியல் விடுதி இங்குதான் செயல்பட்டு வருகிறது.
இந்த பாலியல் விடுதியில் கிட்டத்தட்ட 2,000-க்கும் அதிகமான பாலியல் தொழிலாளர்கள் இருக்கின்றனர்... கடந்த 2 வருடமாகவே மகாராஷ்டிராவில் தொற்று அதிகமாக பரவியது.

விபச்சாரம்
இதனால், கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்திலும் சரி, மாநிலத்தில் அமலாக்கப்பட்ட லாக்டவுனிலும் சரி, இங்குள்ள பாலியல் தொழிலாளர்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள்..அவர்களுக்கு சாப்பாட்டுக்கே இல்லாத நிலைமைதான் ஏற்பட்டது.. அதனால் பலர் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர்.. சமீபகாலமாகத்தான் தொற்று ஓரளவு புனேயில் குறைந்து வருகிறது.. அதனால், புலம்பெயர்ந்து போன பாலியல் தொழிலாளர்கள் பணிக்கு மறுபடியும் திரும்பி உள்ளனர்.

சிவப்பு விளக்கு
இந்நிலையில், பயங்கரமான சம்பவம் ஒன்று புனேவின் இந்த சிவப்பு விளக்கு பகுதியில் நடந்துள்ளது.. அந்த நபர் பெயர் ராஜப்பா.. 40 வயதாகிறது.. புனேவின் வாதார்வாடி பகுதியை சேர்ந்தவர்.. இவர் 2 நாளைக்கு முன்பு, புத்வார் பெத் என்ற சிவப்பு விளக்கு பகுதிக்கு சென்றிருக்கிறார்.. அங்கிருக்கும் ஒரு பாலியல் தொழிலாளி பெண்ணிடம் உறவு கொள்ள தொகையை பேசியுள்ளார்.. அந்த பெண்ணுக்கு 35 வயதாகிறது.. இந்த தொகையில், இருவருக்கும் இடையே நடந்த பேரம் வாக்குவாதமாக மாறிவிட்டது.

ராஜப்பா
ராஜப்பாவின் அடிமாட்டு பேரத்தை அந்த பெண் ஏற்கவில்லை என்றும், அதனால், அவருடன் உறவு கொள்ள மறுப்பு சொன்னதாகவும் தெரிகிறது.. இதனால் ஆத்திரமடைந்த ராஜப்பா, அந்த பெண்ணின் மார்பகத்தை, தான் மறைத்து வைத்திருந்த ஷேவிங் பிளேடால் சரமாரியாக கிழித்துவிட்டார்.. இதில் அந்த பெண் பலத்த காயமடைந்து வலியால் அலறி துடித்தார்.. ரத்தம் கொட்டியது.. இதையடுத்து, அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, போலீசுக்கு தகவலை சொன்னார்கள்.

பெண் தொழிலாளி
போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ராஜப்பாவை சுற்றி வளைத்து கைது செய்தனர்... அவர் மீது வழக்கும் பதிந்தனர்.. ரத்தகாயம் அடைந்த அந்த பாலியல் பெண் தொழிலாளியை, உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.. தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது.. இந்த சம்பவம் புனேயில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications