என்ன கொடுமை இது..? ஆட்டோ ஓவராக சத்தம் போட்டதற்காக, டிரைவர் உருட்டு கட்டையால் அடித்து கொலை
மைசூரூ: ஆட்டோவில் இருந்து அதிகமாக சத்தம் வந்ததால் அதன் டிரைவரை உருட்டுக்கட்டையால் பக்கத்து வீட்டுக்காரர் அடித்துக்கொலை செய்த சம்பவம் கர்நாடக மாநிலம் மைசூர் அருகே நடந்துள்ளது.
மைசூர் மாவட்டம், ஹுன்சூர் தாலுகா அருகேயுள்ள பிலிகெரே என்ற ஊரை சேர்ந்தவர் சீனிவாஸ் (40). இரு குழந்தைகளின் தந்தையான இவர், ஆட்டோ ஓட்டி வாழ்க்கை நடத்தி வந்தார்.
சம்பவத்தன்று காலையில், ஆட்டோவை கிளப்பியபோது, ஸ்டார்ட் ஆக மறுத்தது. எனவே ஆட்டோவை சரி செய்வதற்காக ஆக்சிலேட்டரை முறுக்கியுள்ளார். இந்த சத்தத்தால் பக்கத்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த வெங்கடேசகவுடா என்பவர் விழித்தெழுந்துள்ளார்.
கோபத்தில் வெளியே வந்த வெங்கடேசகவுடா, ஆட்டோவை ரிப்பேர் செய்வதை உடனே நிறுத்தும்படி சீனிவாசிடம் கூறியுள்ளார். ரிப்பேரை சரி செய்ய வேண்டியிருப்பதால் சத்தம் வரத்தான் செய்யும் என்று சீனிவாஸ் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த வெங்கடேசகவுடா, உருட்டுக்கட்டையை எடுத்து வந்து சீனிவாஸ் தலைமீது அடித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சீனிவாஸ் உயிரிழந்தார்.
தகவலறிந்த சீனிவாஸ் உறவினர்கள், வெங்கடேஸ்கவுடாவை கைது செய்ய வலியுறுத்தி போலீஸ் நிலையம் முன்பு தர்ணா நடத்தினர். விசாரணை நடைபெற்றுவருகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications