என்ன கொடூரம் இது? கர்ப்பமாக இருந்த பசுவை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்.. தூக்கிய போலீஸ்
கொல்கத்தா: கர்ப்பமாக இருந்த பசுவை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
எத்தனை நாகரீக வளர்ச்சி அடைந்திருந்தாலும், மனிதத் தோல் போர்த்திய சில மிருகங்கள் நம் மத்தியில் இன்னும் உலவி வருவதை சில சம்பவங்கள் அப்பட்டமாக காட்டி விடுகின்றன. பச்சிளம் குழந்தைகளை பலாத்காரம் செய்வது, மிருகங்களிடம் தகாத உறவு கொள்வது போன்ற சில கொடூர உதாரணங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். அப்படியொரு சம்பவம்தான் மேற்கு வங்கத்தில் அரங்கேறியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் சவுத் 24 பர்கனாஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆர்த்தி புய்யா. இவர் தனது வீட்டுக்கு முன்னால் கால்நடை பண்ணையை வைத்துள்ளார். இங்கு 5-க்கும் மேற்பட்ட பசுக்கள், ஆடுகள், கோழிகள் ஆகியவை வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு இவரது பண்ணையில் இருந்து பசுக்கள் அலறும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, ஆர்த்தி புய்யா அங்கு வந்து பார்த்த போது பக்கத்து வீட்டில் வசித்து வரும் பிரத்யூத் (29) என்ற இளைஞர் அங்கிருந்து ஓடியுள்ளார்.
பின்னர் அங்கிருந்த பசுக்களை பார்த்த போது, அதில் கர்ப்பமாக இருந்த பசு ஒன்றின் மர்ம உறுப்பில் இருந்து அதிகப்படியான ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, உடனடியாக அந்த பசுவை அருகில் இருந்த கால்நடை மருத்துவமனைக்கு ஆர்த்தி புய்யா கொண்டு சென்றார். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த பசு இறந்தது. பின்னர் அதனை சோதித்து பார்த்த மருத்துவர்கள், மனிதனால் அந்த பசு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.
இதுகுறித்து ஆர்த்தி புய்யா அளித்த புகாரின் பேரில், தலைமறைவாக இருந்த பிரத்யூத்தை போலீஸார் இன்று கைது செய்தனர். அவர் மீது ஐபிசி 377 (இயற்கைக்கு மாறாக உடலுறவு கொள்ளுதல்) சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் மாவட்டத்தில் இருக்கும் கன்டோலி தேசிய பூங்கா பகுதிக்குள் 4 பேர் கடந்த ஏப்ரல் மாதம் வேட்டையாட சென்றனர். அப்போது அவர்களின் கண்ணில் பல்லி வகையைச் சேர்ந்த மானிட்டர் பல்லி (Monitor lizard) ஒன்று தென்பட்டது. உடனே வேட்டைக்காரர்களான மங்கேஷ், சந்தீப், ஜனார்தன், அக்ஷய் ஆகிய நான்கு பேரும் அந்த பல்லியைப் பிடித்து அதை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். அவர்களின் அக்கொடூரச் செயல்களை தங்களது மொபைல் போனிலும் வீடியோ எடுத்துக்கொண்டனர். சில வாரங்கள் கழித்து அவர்களின் செல்போன்களை தற்செயலாக வனத்துறையினர் வாங்கி சோதனை செய்த போது அதில் அவர்கள் பல்லியை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, அவர்கள் 4 பேரையும் வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
கல்லூரியில் ரகசிய பெட் ரூம்கள்.. உள்ளே பாக்கெட் பாக்கெட்டாக ஆணுறைகள்! கூடவே கைத்துப்பாக்கி வேற! -
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications