செல்ஃபி எடுக்கும்போது மனைவியை கால்வாயில் தள்ளிக் கொன்ற வாலிபர்
மீரட்: உத்தர பிரதேசத்தில் வாலிபர் ஒருவர் வரதட்சணை கொண்டு வராத கடுப்பில் செல்ஃபி எடுக்கும்போது மனைவியை கால்வாயில் தள்ளி கொலை செய்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள சார்தனா பகுதியை சேர்ந்தவர் அப்தாப்(30). அவருக்கும் ஆயிஷா(24) என்ற பெண்ணுக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு 8 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் அப்தாப் தனது மனைவியை அழைத்துக் கொண்டு கால்வாய் பகுதிக்கு சென்று செல்ஃபி எடுத்துள்ளார். செல்ஃபி எடுத்தபோது அவர் தனது மனைவியை கால்வாயில் பிடித்து தள்ளிக் கொலை செய்துள்ளார்.
நேராக காவல் நிலையத்திற்கு சென்று 5 பேர் தன்னிடம் கொள்ளையடிக்க முயன்றதாகவும், தனது மனைவியை கால்வாயில் தள்ளி கொலை செய்ததாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆயிஷாவின் உடலை தேடிக் கண்டுபிடித்தனர்.
அப்தாப் முன்னுக்கு பின் முரணமாக பேசியதால் சந்தேகப்பட்டு அவரிடம் விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தபோது உண்மையை ஒப்புக் கொண்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்தாபை கைது செய்துள்ளனர்.
அப்தாப் மற்றும் அவரது அண்ணன் ஷெஹ்சாத் மீது வரதட்சணை கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications