"ஐயோ பசி தாங்க முடியலை".. செத்து கிடந்த நாயை தின்ற இளைஞர்.. ஹோட்டல்காரர் விரட்டியதால் பரிதாபம்

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: வயிற்று பசியில் துடித்த ஒருவர் ஹோட்டலுக்கு சென்றார். அங்கு உணவு கிடைக்காததால் அந்த நபர் ர் நெடுஞ்சாலையில் செத்துக்கிடந்த நாயின் உடலை தின்ற சம்பவம் அனைவரையும் உறைய வைத்துள்ளது.

man-seen-eating-dogs-carcass-on-highway-in-odisha

இந்த சம்பவம் ஒடிசா மாநிலம் சாம்பல்பூர் புறநகர் மனீஸ்வர் சாக் பகுதியில் நடந்துள்ளது. நவம்பர் 12ம் தேதி இரவு 9.10 மணிக்கு சாலையில் நடந்துசென்ற நபர் அங்குள்ள ஹோட்டலுக்கு சென்றார்.

ஹோட்டலில் இருந்தவர்களிடம் அவர் பேசினார். ஆனால் அவர் பார்க்க வித்தியாசமாக இருந்ததால் அவர்கள் உணவு வழங்கவில்லை. விரட்டிவிடப்பட்டார். இதனால் அந்த நபர் நெடுஞ்சாலையில் மீண்டும் நடந்து சென்றார்.

அப்போது நெடுஞ்சாலையில் நாய் ஒன்று இறந்து கிடந்தது. அந்த நாயின் உடல் பாகங்களை எடுத்து தின்றுள்ளார்.
இதுபற்றி அந்த பகுதியில் உள்ள மக்கள் கூறுகையில், ''நெடுஞ்சாலையில் சென்ற நாய் வாகனம் மோதி இறந்து கிடந்தது. அப்போது அங்கு வந்த நபர் செத்து கிடந்த நாயின் உடல் பாகங்களை எடுத்து தின்றார். அவர் பார்க்க மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருந்தார்.

முன்னதாக இவர் அருகே உள்ள ஹோட்டலுக்கு சென்று வந்திருந்தார். இதனால் வயிற்று பசி தாங்க முடியாமல் அவர் செத்த நாயின் உடல் பாகங்களை எடுத்து தின்று இருக்கலாம்'' என்று கூறியுள்ளனர்.

இதற்கிடையே தான் அந்த நபர் நாயின் உடல் பாகங்களை எடுத்து சாப்பிடும் வீடியோ எடுத்த நிலையில் தற்போது அது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவை பார்க்கும் பலரும் அரசு, உள்ளாட்சி நிர்வாகம் அல்லது தனியார் தொண்டு நிறுவனங்கள் யாராவது உதவி செய்ய முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இன்னொரு நெட்டிசனோ, ''உலகில் கொடுமையானது பசி. பாவம் வயிற்று பசியால் நாய் கறியை தின்கிறார். இவருக்கு யாராவது உதவி செய்ய வேண்டும்'' என கேரியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+