என்ன இருந்தாலும் ரித்தர் சிங்குக்கு இவ்வளவு கோபம் ஆகாது.. குப்பென பத்த வச்சுட்டாரே!
சொந்த காரை தீ வைத்து கொளுத்திய நபரின் வீடியோ வைரலாகிறது
Recommended Video
காந்திநகர்: இருந்தாலும் ரித்தர் சிங்-குக்கு இவ்வளவு கோபம் கூடாது.. நடுரோட்டிலேயே தனது ஜீப்பை குப்பென பற்ற வைத்து விட்டார்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியை சேர்ந்தவர்தான் இந்த ரித்தர் சிங். இவர் தன்னுடைய நண்பர் நமிஷ் கோஹலுடன் ஜீப்பில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென வண்டி நின்றுவிட்டது. அதனால் என்ன கோளாறு என்று பார்த்தபோது, பேட்டரி செயல்படவில்லை என்பது தெரிந்துள்ளது.
இதனால் ரித்தர் சிங்குக்கு அதிகமாக கோபம் வந்துவிட்டது. ரோட்டில் இத்தனை நடமாடுகிறார்களே, என்ன நினைப்பார்கள், என்ன ஆகும் என்றெல்லாம் யோசிக்கவில்லை.. அப்படியே ஜீப் மீது பெட்ரோலை தூக்கி ஊற்றி கொளுத்தி விட்டார். இதில் வண்டி குபுகுபுவென தீப்பிடித்து எரிந்தது.
இதை பார்த்த மக்கள், ஆளுக்கொரு பக்கம் தலைதெறித்து சிதறி ஓடினார்கள். கோபமடைந்து, ஆத்திரத்தில் பெட்ரோல் ஊற்றி ஜீப்பை கொளுத்துவதை கூடவே இருந்த நண்பன் செல்போனில் வீடியோ எடுத்து இணையத்திலும் போட்டுள்ளார்.
இந்த வீடியோ, ஜீப் தீ பிடித்ததை விட வேகமாக பரவி வருகிறது. தகவலறிந்த போலீஸ், அந்த வீடியோ பதிவை வைத்து 2 பேரையும் கைது செய்துள்ளனர். பொது இடத்தை சேதப்படுத்துதல், பொது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளுதல் போன்ற குற்ற வழக்குகளும் அவர்கள் மீது பதிவாகி உள்ளன. ஜீப் தீப்பிடித்து எரியும் இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications