இதுவல்லவோ புருஷ லட்சணம்.. மனைவி தூங்குவதற்காக 6 மணி நேரம் விமானத்தில் நின்று கொண்டே பயணித்த கணவர்!
Recommended Video
டெல்லி : மனைவிக்காக விமானத்தில் சுமார் 6 மணி நேரம் நின்று கொண்டே பயணித்த கணவரின் புகைப்படம் வைரலாகியுள்ளது.
சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகும். பெரும்பாலும் அவை சினிமா நடிகர், நடிகையரின் புகைப்படங்களாகவோ, அல்லது விலங்குகள், குழந்தைகள் சேட்டை செய்யும் புகைப்படங்களாகவோ, வீடியோக்களாகவோ தான் இருக்கும்.
ஆனால் தற்போது வைரலாகியுள்ள புகைப்படம், மனிதநேயத்தையும், கணவன் - மனைவி இடையேயான காதலை சொல்லும் வகையில் அமைந்துள்ளது. சம்பந்தப்பட்ட அந்த புகைப்படத்தில் ஒரு ஆண் விமானத்தில் நின்றபடி இருக்கிறார். அவருக்கு அருகில் ஒரு பெண் இருக்கையில் படுத்து உறங்குகிறார்.
|
இது தான் காதல்
இந்த புகைப்படத்தை கோர்ட்னி லீ ஜான்சன் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "இந்த நபர் தனது மனைவி உறங்க வேண்டும் என்பதற்காக, 6 மணி நேரம் நின்றுகொண்டே விமானத்தில் பயணித்தார். இது தான் காதல்", என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைரலாகும் புகைப்படம்
இந்த புகைப்படம் டிவிட்டரில் வைரலாக பரவி வருகிறது. அந்த ஆண் தனது மனைவி மீது வைத்திருக்கும் காதலை பலரும் பாராட்டி வருகின்றனர். இதுவல்லவோ காதல் என புகழ்ந்து தள்ளுகின்றனர்.

சுயநலவாதி மனைவி
ஆனால் சிலர் உறங்கும் அந்த பெண்ணை சுயநலவாதி என திட்டி தீர்க்கின்றனர். அவர் நினைத்திருந்தால், தனது கணவரின் தோள் மீது சாய்ந்துபடுத்திருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யாமல், தனது கணவரை நிற்க வைத்துவிட்டார் என சாடுகிறார்கள்.
|
டைட்டானிக் ரோஸ்
டைட்டானிக் படத்தில் ஜாக், ரோஸ் க்ளைமாக்ஸ் புகைப்படத்தை பதிவிட்டு, அந்த பெண்ணை சுயநலவாதி என குறிப்பிட்டுள்ளார் ஒருவர். இப்படி பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவிக்கும் அளவுக்கு உலகம் முழுவதும் சுற்றி வருகிறது அந்த புகைப்படம்.

மனைவியின் பாசம்
பாவம் இப்படி பிளைட்டில் கூட படுத்துக் கொண்டே வரும் அளவிற்கு, அப்பெண்ணிற்கு என்ன உடல்நலப் பிரச்சினை எனத் தெரியவில்லை. மனைவிக்காக ஒரு கணவர் ஆறு மணி நேரம் நின்று கொண்டே பயணிக்கிறார் என்றால், எந்தளவுக்கு அப்பெண் தன் கணவருக்கு பாசத்தைக் கொடுத்திருக்க வேண்டும் என்றும் சிலர் அப்பெண்ணைப் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications