நடிகர் நாகர்ஜுனாவின் மகன் பெயரில் ஃபேஸ்புக்கில் போலி கணக்கு: வாலிபருக்கு தர்ம அடி
ஹைதராபாத்: நடிகர் நாகர்ஜுனாவின் மகன் அகில் பெயரில் ஃபேஸ்புக்கில் போலி கணக்கு வைத்திருந்த வாலிபர் இளம் பெண் மற்றும் அவரது சகோதரர்களால் அடித்து நொறுக்கப்பட்டார்.
ஹைதராபாத்தில் உள்ள குகட்பள்ளியைச் சேர்ந்தவர் இவெண்ட் மேனேஜரான 23 வயது ராணி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவருக்கும் நடிகர் நாகர்ஜுனா, நடிகை அமலா தம்பதியின் மகன் அகில் அகினேனியின் பெயரில் ஃபேஸ்புக்கில் போலி கணக்கு வைத்திருந்த தேவினேனி அபினவ்(24) என்பவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது.

அகில் பெயரை பயன்படுத்தி ராணியுடன் ஃபேஸ்புக்கில் பேசி வந்த அபினவ் தனது காதலையும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் ராணி அகில் பெயரில் யாரோ தன்னுடன் ஃபேஸ்புக்கில் சாட் செய்வதை தெரிந்து கொண்டார். அந்த நபரை கண்டுபிடிக்க அவர் தொடர்ந்து சாட் செய்தார்.
அபினவை கண்டுபிடித்த ராணி தனது சகோதரர்கள், நண்பர்களுடன் சேர்ந்து அவரை அடித்து நொறுக்கினார். பின்னர் அவர்கள் அபினவை போலீசில் ஒப்படைத்தனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில்,
அந்த நபர் போலி கணக்கு துவங்கினாரே தவிர அந்த பெண்ணை மோசடி செய்யவில்லை. அந்த பெண் அபினவ் போலி கணக்கு துவங்கியதை கண்டுபிடித்து அவரை நேரில் வருமாறு கூறினார். அபினவ் வந்தபோது அவர் தாக்கப்பட்டார் என்றார்.
அபினவ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுத்துவிட்டனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications