ம்ஹூம்.. ஜோலி முகத்தை நான் பார்த்தே ஆகணும்.. துணியை அகற்றிய இளைஞர்.. கோழிக்கோட்டில் பரபரப்பு
ஜோலி முகத்தில் இருந்த துணியை அகற்றிய இளைஞர் கைது செய்யப்பட்டார்
Recommended Video
கோழிக்கோடு: "ம்ஹூம்.. நான் ஜோலி முகத்தை பார்த்தே ஆகணும்.." என்று சொல்லி இளைஞர் ஒருவர் ஜோலியின் துணியை அகற்றிய சம்பவம் கேரளாவில் பரபரப்பை தந்துள்ளது.
கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கூடத்தாயி கிராமத்தை சேர்ந்தவர் ஜோலி. இவர் வளர்ந்ததெல்லாம் கிராமம் என்றாலும், வாழ்ந்த வாழ்க்கையை பார்த்தால் அப்படி தெரியவில்லை.
மாமியார் வீட்டின் ஏகப்பட்ட சொத்துக்களை ஆட்டைய போட, கொலை வரை சென்றுள்ளார். மாமனாருக்கு காபி, மாமியாருக்கு மட்டன் சூப், குழந்தைக்கு பிரட்.. என சாப்பிடும் பொருட்களாக பார்த்தே விஷத்தை தந்து கொன்றுள்ளார்.

அபார்ஷன்கள்
மொத்தம் 6 கொலைகளை செய்த ஜோலியின் லீலைகளை கண்டு இந்தியாவே அதிர்ந்து நிற்கிறது. நிறைய ஆண் நண்பர்கள், அபார்ஷன்கள், நடுஜாம பூஜைகள், நரபலிகள் என நித்தம் ஒரு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இப்போது ஜோலி போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளார்.

மருத்துவ பரிசோதனை
இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஜோலியை மெடிக்கல் செக்கப் செய்வதற்காக கொயிலாண்டி தாலுகா மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். வழக்கமாக ஜோலியை விசாரணைக்கு அழைத்து வரும்போதெல்லாம் கோர்ட் வாசலிலேயே ஏராளமான மக்கள் திரண்டு இருப்பார்கள். பலர் ஜோலிக்கு எதிரான முழக்கத்தையும் எழுப்பி கொண்டே இருப்பார்கள்.

பாதுகாப்பு
ஆனால் ஜோலி யாரையுமே நிமிர்ந்து பார்க்க மாட்டார். தலையில் ஒரு துணியை போர்த்தியபடிதான் போலீசார் அழைத்து வந்து, அப்படியே திரும்ப கூட்டி செல்வார்கள். இதனால் அவரது முழு முகத்தை பார்க்க முடிவதில்லை. இப்போதும் அப்படித்தான், ஜோலியின் முகத்தை துணியால் மூடி அழைத்து சென்ற நிலையில், கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞர் ஓடிவந்து, அவரது முகத்தில் இருந்த துணியை அகற்றினார்.

கைது
திடீரென இளைஞர் செய்த இந்த காரியத்தை கண்டு பாதுகாப்பு போலீசார் டென்ஷன் ஆகிவிட்டனர். இதையடுத்து அந்த இளைஞரை கைது செய்து, எதற்காக துணியை அகற்றினார் என்று விசாரித்தனர். அவரது பெயர் சாஜூ என்பதும், கன்னஞ்சேரியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. ஜோலியின் முகத்தை பார்த்தே ஆகணும் என்றுதான் துணியை விலக்கினாராம். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications