சபரிமலையில் மண்டல பூஜை: தங்க அங்கியில் ஜொலித்த ஐயப்பன்
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டலபூஜையை ஒட்டி தங்க அங்கியில் ஜொலிக்கும் ஐயப்பனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல பூஜைகள் கடந்த மாதம் 15-ந் தேதி தொடங்கியது.
நடைதிறந்த முதல் நாளில் இருந்தே ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் குவிந்தனர். இதுவரை இல்லாத அளவுக்கு கூட்டம் அதிகரித்ததால் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டது.

வழக்கமாக மண்டல பூஜை காலங்களில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். இந்த ஆண்டு அதிகாலை 3 மணிக்கே நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தன.
இதுபோல இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும். இம்முறை இரவு 11.45 மணிக்கு தான் நடை அடைக்கப்பட்டது. எனினும் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் 10 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமியை தரிசித்தனர்.
மண்டல பூஜை தொடங்கி ஒரு மண்டலம்(41 நாட்கள்) இன்றுடன் முடிவடைவதால் இன்று பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெற்றது.
இதனையொட்டி ஐய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்கஅங்கிகள் நேற்று மாலை சன்னிதானத்தை வந்தடைந்தது. தங்க அங்கி ஊர்வலத்திற்கு தேவசம்போர்டு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக் கப்பட்டது.
கண்டரரு மகேஷ்வரரு, மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி ஆகியோர் தங்க அங்கிகளை பெற்றுக் கொண்டு கோவில் கருவறைக்குள் கொண்டு சென்றனர். பின்னர் தங்கஅங்கிகள் சுவாமிக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இன்றும் ஐய்யப்பனுக்கு தங்கஅங்கி சாத்தி சிறப்பு பூஜைகள் நடந்தது.
அப்போது, சன்னிதானத்தில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சரண கோஷம் முழங்க தங்கஅங்கியில் ஜொலித்த சுவாமியை தரிசித்தனர். தொடர்ந்து நடை அடைக்கப்பட்டது.
மாலை 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு அத்தாழ பூஜை நடக்கிறது. இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடல் ஒலிக்கப்பட்டு நடை அடைக்கப்படுகிறது. இதையடுத்து இவ்வருட மண்டல பூஜைகள் முடிவடைகிறது.
மகரவிளக்கு பூஜை
வருகிற 30-ந் தேதி வரை பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
மகர விளக்கு பூஜை திருவிழாவுக்காக வருகிற 30ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. ஜனவரி 14-ந் தேதி சிறப்பு வாய்ந்த மகர விளக்கு பூஜை மற்றும் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications