மணிபூர் தாக்குதலுக்கு மூளையான தீவிரவாதிகளின் தலைவர் கப்லாங் எங்கே?
இம்பால்: மணிபூரில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு முக்கிய மூளையாக இருந்த தீவிரவாதிகளின் தலைவர் எஸ்.எஸ். கப்லாங்கை கைது செய்வது மிகவும் முக்கியமானது.
மணிபூரில் 18 ராணுவ வீரர்களை கொன்ற தீவிரவாதிகளில் சிலரை இந்திய ராணுவம் மியான்மர் எல்லையில் வைத்து அழித்தது. மணிபூர் கொலை குறித்து தேசிய புலனாய்வு நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் தாக்குதலை நடத்திய தீவிரவாத அமைப்பின் தலைவர் எஸ்.எஸ். கப்லாங்கை கைது செய்வது மிகவும் முக்கியம்.
மணிபூர் தாக்குதலின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் பற்றி தேசிய புலனாய்வு நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது. அண்மை காலத்தில் சக்திவாய்ந்த தலைவராக உருவாகியுள்ள கப்லாங் குறித்தும் தேசிய புலனாய்வு நிறுவனம் விசாரித்து வருகிறது.

கப்லாங் எங்கே?
என்.எஸ்.சி.என்-கே என்ற தீவிரவாத அமைப்பின் தலைவராக உள்ளவர் கப்லாங். மணிபூர் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள அந்த அமைப்பின் தலைவர் கப்லாங்கிற்கு மியான்மரின் தாகாவில் ஒரு வீடும், சீனாவின் யுனான் மாகாணத்தில் ஒரு வீடும் உள்ளது. யுனான் மாகாணத்தில் பலமுறை காணப்பட்ட உல்பா தீவிரவாதி பிரகாஷ் பருவாவுடன் கப்லாங்கிற்கு தொடர்பு உள்ளது.

சீனா
மணிபூர் தாக்குதலை அடுத்து இந்திய ராணுவம் தீவிரவாதிகளை அழிக்கும் என்று எதிர்பார்த்த கப்லாங் தாகாவில் இருந்து வெளியேறி யுனான் மாகாணத்திற்கு தப்பியோடியிருக்க வேண்டும் என்று உளவுத் துறை சந்தேகிக்கிறது. அவர் எங்கிருந்தாலும் தனது ஆட்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார்.

சக்திவாய்ந்தவர்
வடகிழக்கு இந்தியாவில் உள்ள தீவிரவாதிகளிடையே கப்லாங் தான் மிகவும் செல்வாக்கு வாய்ந்தவர். அவர் உல்பா, கேஎல்ஓ உள்பட பிற வடகிழக்கு தீவிரவாத அமைப்புகளை யுனைடெட் லிபரேஷன் பிரண்ட் ஆப் வெஸ்டர்ன் சவுத் இந்தியா என்ற ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வந்து அதற்கு தலைவர் ஆனார்.

விசாரணை
மணிபூர் தாக்குதல் நடந்த இடத்தில் கிடைத்த துப்பாக்கி குண்டுகள், வெடிகுண்டு மாதிரிகள் உள்ளிட்டவை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. என்.எஸ்.சி.என்.-கே அமைப்பு இந்த தாக்குதலை நடத்த ஒரு மாதத்திற்கும் மேல் திட்டமிட்டு ராணுவத்தின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications