வட கிழக்கில் "மையம் கொள்ளும்" ராகுல்.. மணிப்பூரில் சூறாவளி சுற்றுப் பயணம்.. மார்ச் 1ல் தொடக்கம்
இம்பால்: மணிப்பூர் மாநில 2ம் கட்ட சட்டசபை தேர்தலையொட்டி மார்ச் 1 முதல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. இதில் உத்தரகாண்ட், கோவாவில் பிப்.,14, பஞ்சாப்பில் பிப்.,20ல் தேர்தல்கள் முடிவடைந்தன.
உத்தரபிரதேசத்தில் 4 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. 5ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இதுதவிர இன்னும் 2 கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ளது.

மணிப்பூர் தேர்தல்
மணிப்பூரில் பிப்.,28ல் முதற்கட்ட தேர்தலும், மார்ச் 5ல் இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெற உள்ளது. மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன. தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. நாங்தோம்பம் பீரன் சிங் முதலமைச்சராக உள்ளார். இந்நிலையில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பாஜக தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இழந்த ஆட்சியை மீட்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

ராகுல்காந்தி பிரசாரம்
முதற்கட்ட தேர்தலலில் காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் தொடர்ச்சியாக பிரசாரம் மேற்கொண்டனர். இந்நிலையில் மணிப்புரில் 2ம் கட்ட தேர்தலையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். மார்ச் 1ம் தேதி முதல் பல்வேறு பொதுக்கூட்டங்களில் அவர் பேச உள்ளார். முன்னதாக ராகுல்காந்தி பிப்ரவரி 21ல் இம்பாலில் உள்ள ஹப்டா காஞ்சிபங்க் பகுதியில் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

5 கட்சிகளுடன்...
மணிப்பூர் மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனால் 6 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பார்வர்டு பிளாக், புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி, மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் உள்ளன.

கூட்டணியின் பெயர்
இந்த கூட்டணிக்கு மணிப்பூர் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என பெயரிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் மணிப்பூர் மாநில தேர்தல் பார்வையாளராக மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் நியமகிக்கப்பட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications