For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மணிப்பூர் இறுதிக்கட்ட நிலவரம்: காங். 24 இடங்களில் வெற்றி.. பாஜக 20 இடங்களில் வெற்றி

மணிப்பூரில் காங்கிரஸ் 24 இடங்களிலும் பாஜக 20 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

Google Oneindia Tamil News

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 24 இடங்களிலும் பாஜக 20 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மற்றவை 11 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. எஞ்சிய 2 தொகுதிகளில் ஒன்றில் காங்கிரஸ் கட்சியும் மற்றொன்றில் மற்றவையும் முன்னிலையில் உள்ளன.

மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் 60 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இரண்டு மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சியமைக்க 31 சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும்.

Manipur Election Results 2017 : Will Congress retain its bastion?

இங்கு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக, காங்கிரஸ், சமூக ஆர்வலர் இரோம் ஷர்மிளாவின் மக்கள் எழுச்சி மற்றும் நீதி கூட்டணி கட்சி, திரினாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன.

இங்கு மார்ச் 4 மற்றும் மார்ச் 8 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்டத் தேர்தல் வாக்குப் பதிவின் போது, 34 வாக்குச் சாவடிகளில், முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்ததை அடுத்து மார்ச் 9ஆம் தேதி மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

அனைத்திந்திய திரினாமுல் காங்கிரஸ் 7 இடங்களிலும் மற்றவை 6 இடங்களிலும் வெற்றி பெற்றன. மணிப்பூர் மாநில காங்கிரஸ் 5 இடங்களை கைப்பற்றியது.

இந்நிலையில் தற்போது நடந்துள்ள சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் காங்கிரஸ் கட்சி இரண்டு இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜாக மற்றும் நாகா மக்கள் முன்னணிகள் தலா ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளன. புதிதாக கட்சித்தொடங்கி முதல்முறையாக களம் கண்டுள்ள இரோம் ஷர்மிளா பின்னடைவை சந்தித்துள்ளார்.

இரண்டாம் கட்டத் தேர்தல் வாக்குப் பதிவின் போது, 34 வாக்குச் சாவடிகளில், முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்ததை அடுத்து மார்ச் 9ஆம் தேதி மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் இதற்கான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. இதில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் முன்னிலைப் பெற்றுள்ளது. 10 மணியளவில் மணிப்பூரில் ஆட்சிக்கட்டிலில் அமரப்போவது யார் தெரியவரும் என எதிர் பார்க்கப்படுகிறது.

English summary
Manipur saw record voter turnout despite unrest and blockade and the Manipur Election vote counting starts. congress leading in 2 places, BJP and NPF leading in one place.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X