"த*கொலை செய்து கொள்வோம்.." தலையில் பெட்ரோலை ஊற்றி.. ஒரே நேரத்தில் 50 மணிப்பூர் இளைஞர்கள் மிரட்டல்
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் இப்போது மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. அங்குப் பல மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மணிப்பூரில் திடீரென இளைஞர்கள் பலர் ஒரே நேரத்தில் தங்கள் தலையில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மணிப்பூரில் கடந்த சில ஆண்டுகளாகவே மெய்தி மற்றும் குக்கி சமூகத்தினருக்கு இடையே வன்முறை இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைக்குப் பிறகு அங்கு வன்முறை குறைந்து, சற்றே அமைதி திரும்பியிருந்தது. இதற்கிடையே மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.

மணிப்பூர் போராட்டம்
மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் மெய்தி சமூகத்தின் தன்னார்வக் குழுவான ஆராம்பாய் டெங்கோல், அதாவது ஏடி அமைப்பின் முக்கியத் தலைவர் கைது செய்யப்பட்டார். இதைக் கண்டித்து மெய்தி சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சில மெய்தி சமூக இளைஞர்கள் திடீரென தங்கள் தலையில் பெட்ரோல் ஊற்றித் தீக்குளிக்கப் போவதாக மிரட்டல் விடுத்தனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.
ஏடி குழுவினர் தலைவர் கனன் சிங்கை கடந்த சனிக்கிழமை அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து சனிக்கிழமை இரவு இம்பாலில் போராட்டங்கள் வெடித்தன. போராட்டக்காரர்கள் சாலையில் டயர்களை எரித்து சாலைகளை மறித்தனர். மேலும், அப்போது அப்பகுதியில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும் இம்பால் நகரவாசிகள் தெரிவித்தனர்.
பெட்ரோலை தலையில் ஊற்றி
இந்த போராட்டம் குறித்த வீடியோ இணையத்தில் இப்போது பரவி வருகிறது. அதில் கருப்பு டி-ஷர்ட் அணிந்த இளைஞர்கள் பெட்ரோல் பாட்டில்களைக் கையில் வைத்திருந்தனர். அவர்களில் ஒருவர், "நாங்கள் ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டோம். வெள்ளம் ஏற்பட்டபோது செய்ய வேண்டியதைச் செய்தோம். ஆனால், இப்போது எங்களைக் கைது செய்கிறீர்கள். நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம். அதைத் தவிர வேறு வழியில்லை" என்று கூறினார்.
என்ன காரணம்!
மணிப்பூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ASP) மொய்ராங்தேம் அமித் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியது, கடந்த 2024 பிப்ரவரி மாதம் மூத்த போலீஸ் அதிகாரியைக் கடத்தியது ஆகிய வழக்குகளில் கனன் சிங் முக்கிய குற்றவாளியாகச் சந்தேகிக்கப்படுகிறார். முன்பு இந்த கனன் சிங் மாநில காவல்துறையின் கமாண்டோ பிரிவில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தார். இருப்பினும் அப்போது கடமை தவறியதற்காக அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அதன் பிறகே, கனன் சிங் ஏடி அமைப்பில் சேர்ந்த வன்முறை செயல்களில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது.
மணிப்பூரில் திடீரென வன்முறை வெடித்ததால் இப்போது பிஷ்ணுபூர், இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, தவுபால் மற்றும் காக்சிங் ஆகிய ஐந்து மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐந்து நாட்களுக்கு இணையச் சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.
பின்னணி
மணிப்பூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அப்போது சட்டவிரோதமாக வைத்திருந்த துப்பாக்கிகளைப் போராட்டக்காரர்கள் ஒப்படைக்க வேண்டும் என மணிப்பூர் ஆளுநர் ஏ.கே. பல்லா கோரிக்கை விடுத்தார். அப்படி துப்பாக்கிகளை ஒப்படைத்தால் அந்த கிராமங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் எனக் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து ஏடி அமைப்பைச் சேர்ந்த பலரும் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்தனர்.
இதைச் சுட்டிக்காட்டிய போராட்டக்காரர்கள், சமீபத்தில் மணிப்பூர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்ட போதும் நிவாரண பணிகளில் இறங்கியதாகத் தெரிவித்தனர். அப்படியிருக்கும்போது தங்கள் மீது திடீரென இதுபோல நடவடிக்கை எடுப்பதை ஏற்கவே முடியாது என்றும் தெரிவித்தனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications