60 ஆண்டு மோதலுக்கு தீர்வு.. மணிப்பூரில் அமைதி ஒப்பந்தத்தில் UNLF கையெழுத்து! சாதித்த பாஜக அரசு
இம்பால்: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஆயுதமேந்திய அமைப்பான யூஎன்எல்எப் உடன் அமைதிக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. மத்திய, மாநில பாஜக அரசின் தொடர் முயற்சியின் காரணமாக அந்த குழுவை சேர்ந்தவர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து அமைதி வழிக்கு திரும்பி உள்ள நிலையில் இது வரலாற்றில் புதிய மைல்கல் என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் மணிப்பூரும் ஒன்று. இந்த வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு இனக்குழுவை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.

இதில் சில இனக்குழுவை சேர்ந்தவர்கள் தனித்தனியான பெயர்களில் அமைப்புகளை உருவாக்கி ஆயுதம் ஏந்தி போராட்டத்தையும் முன்னெடுத்து வருகின்றனர்.
அப்படி மணிப்பூர் மாநில தலைநகர் இம்பால் பள்ளத்தாக்கு பகுதியில் ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (Union National Liberation Front or UNLF) எனும் அமைப்பினர் செயல்பட்டு வந்தனர். இவர்கள் மணிப்பூர் மாநிலத்தின் ஆயுதக்குழுவாக நீண்டகாலமாக அறியப்படுகிறார்கள். இவர்கள் மத்திய, மாநில அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து வந்தனர்.
சுமார் 60 ஆண்டுகளாக இவர்கள் அரசுக்கு எதிராக செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் யூஎன்எல்எப் அமைப்பை சேர்ந்தவர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு இம்பாலில் அரசியலமைப்பு தின விழா நடந்தது. இதில் முதல்வர் பைரன் சிங் பேசினார்.
அப்போது யூஎன்எல்எப் அமைப்பு உடனான அமைதி பேச்சுவார்த்தை சுமூகமான நிலையில் இருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் தான் தற்போது யூஎன்எல்எப் அமைப்புடனான அமைதி ஒப்பந்தம் டெல்லியில் கையெழுத்தாகி உள்ளது. இதன்மூலம் யூஎன்எல்எப் அமைப்பு ஆயுதமேந்தி போராடுவதை கைவிட்டு மணிப்பூர் மாநில அரசுடன் இணக்கமாக செல்ல ஒப்புக்கொண்டுள்ளது. அதோடு அந்த குழுவை சேர்ந்தவர்கள் ஆயுதங்களை ஒப்படைத்துள்ளனர்.
A historic milestone achieved!!!
— Amit Shah (@AmitShah) November 29, 2023
Modi govt’s relentless efforts to establish permanent peace in the Northeast have added a new chapter of fulfilment as the United National Liberation Front (UNLF) signed a peace agreement, today in New Delhi.
UNLF, the oldest valley-based armed… pic.twitter.com/AiAHCRIavy
இது மணிப்பூர் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதுபற்றி மத்திய அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛இது வரலாற்றின் முக்கிய நிகழ்வு. வடகிழக்கு பகுதியில் நிரந்தரமாக அமைதியாக நிலைநாட்ட மோடி அரசு இடைவிடாது முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி யூஎன்எல்எப் இன்று அமைதிக்காக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இது புதிய அத்தியாயமாகும். மணிப்பூர் மாநில ஆயுதக்குழுவான இது வன்முறையை கைவிட்டு அரசுடன் சேர்ந்து பயணிக்க ஒப்புக்கொண்டுள்ளது. அவர்களை ஜனநாயக செயல்முறைகளுக்கு வரவேற்கிறேன். அமைதி மற்றும் முன்னேற்றத்துக்கான அவர்களின் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்'' என தெரிவித்துள்ளார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications