மணிப்பூர்: குக்கி பெண்கள் மானபங்கம்..மிசோரமில் இருந்து விரட்டப்பட்ட 41 மைத்தேயிகள் அஸ்ஸாமில் தஞ்சம்!
குவஹாத்தி: மணிப்பூரில் குக்கி இன பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ அந்த இனக்குழுவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. குக்கிகள் பெரும்பான்மையினராக உள்ள மிசோரம் மாநிலத்தில் இருந்து மைத்தேயி மக்கள் வெளியேற்றப்பட்டும் வருகின்றனர்.
மணிப்பூரின் குக்கி- மைத்தேயி இனக்குழுக்களிடையேயான மோதல் 3 மாதங்களாக தொடருகிறது. இம்மோதல்களைத் தடுக்க மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை. மணிப்பூரில் 50,000க்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்ட நிலையிலும் வன்முறைகள் தொடருகின்றன. மேலும் 3 மாதங்களாக இணைய சேவை துண்டிக்கப்பட்டிருப்பதால் பல வன்மூறை சம்பவங்களின் கோர முகம் வெளியாகவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் 2 குக்கி இனப் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய கொடூரத்தை நிகழ்த்திய மைத்தேயி இனக்குழுவினர் மீது குக்கி இன மக்கள் பெரும் வன்முறையை நிகழ்த்தலாம் எனவும் அச்சம் நிகழ்கிறது.
இதனிடையே குக்கி இனக்குழுவினர் அதிகம் வாழும் மிசோரம் மாநிலத்தில் இருந்து மைத்தேயி இனக்குழுவினர் உடனடியாக வெளியேற வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சொந்த பாதுகாப்பு கருதி அனைவரும் வெளியேற குக்கி இனக்குழு உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து மிசோரம் மாநிலத்தில் இருந்து மைத்தேயி இனமக்கள் சாரை சாரையாக வெளியேறி வருகின்றனர்.
மிசோரம் மாநிலத்தில் இருந்து உயிருக்கு அஞ்சி தப்பி வெளியேறிய மைத்தேயி மக்கள் தற்போது அஸ்ஸாம் மாநிலத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதுவரை மிசோரம் மாநிலத்தில் இருந்து 41 பேர் அஸ்ஸாமில் தஞ்சமடைந்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications